மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ 2500 எப்போது பயனாளிகளுக்கு கிடைக்கும் என்பது குறித்து நிதித் துறை அமைச்சர் மரியவில்சன் விளக்கம் அளித்துள்ளார். இந்த மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வரவு வைக்கப்பட்ட நிலையில் தவெக வாக்குறுதி அளித்த ரூ 2500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில், புதுச்சேரி கூடைப்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்தன.

Rs 2500 Magalir Urimai Thogai

இவ்விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவரும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்கினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஹரியானா அணி 2-ஆம் இடத்தையும், ராஜஸ்தான் அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணி முதலிடத்தைக் கைப்பற்றி சாம்பியன் ஆனது. கேரள அணி 2-ஆம் இடத்தையும், தமிழக பெண்கள் அணி 3-ஆம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டன.

பரிசளிப்பு விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரி தனது பிறந்த ஊர் என்பதால் இந்த நிகழ்வு பழைய நினைவுகளைக் கிளர்த்துவதாகவும், அமைச்சராகத் தான் கலந்து கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ விழா இதுவே என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழக அரசின் முக்கியப் பணிகள் குறித்துப் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து திருத்திய பட்ஜெட்டும் (Revised Budget) விரைவில் தாக்கல் செய்யப்படும்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து விளக்கம்

முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர்: "இது முற்றிலும் மரபு சார்ந்த ஒரு சந்திப்பு மட்டுமே. புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள அவர், நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசுவது இயல்பான ஒன்று" என்று விளக்கமளித்தார்.

மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அதுபற்றிக் கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று கூறினார்.

அதிமுக ஆட்சிக்காலத் திட்டங்களுக்கு மாற்றாக, தவெக அரசு அறிவித்துள்ள மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் குறித்துக் கேட்டபோது, மாநிலத்தின் உண்மையான நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இத்திட்டம் குறித்து முதலமைச்சர் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார். வெள்ளை அறிக்கை 2 வாரங்களில் வெளியாகும் என கூறியுள்ள நிலையில் அதன் பிறகு ரூ 2500 குறித்து முதல்வர் அறிவிப்பார் என வில்சன் சொன்னதை பார்க்கும் போது 2 வாரங்கள் கழித்து அல்லது பட்ஜெட்டின் போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை பெற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தேர்தலின் போது முதல்வராக இருந்த ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். அது போல் தவெக தலைவர் விஜய்யும், தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் ரூ 2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார்.

அந்த வகையில் தவெக அரசு கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றது. மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாதம் என்னாச்சு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதை அடுத்து கடந்த 15 ஆம் தேதி பழைய தொகையான ரூ 1000 வரவு வைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்த நிலையில் ரூ 2500 எப்போது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+