கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? பஸ் உரிமையாளர்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகளுடன் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2012ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.

When will Kilamakkam Omni Bus Stand open?

நிலம் மற்றும் திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கு பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 2019ம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 88 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதில் புறநகர் பேருந்து நிலையமும், வெளியூருக்குச் செல்லும் பேருந்து முனையமும் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்திக்கொள்ளும் வசதியும் அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் முழு வீச்சில் நடந்தாலும், இன்னும் எப்போது திறக்கப்படும் என்பது உறுதியாகவில்லை. ஒவ்வொரு முறையும் பேருந்து நிலையத்தின் திறப்பு தள்ளிபோய் வருகிறது. தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு வரும் அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறங்கிவிடுவார்கள். இதன் காரணமாக கோயம்பேட்டுக்கு தற்போது வந்துசெல்லும் 60 சதவிகித பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி , வடபழனி, கோயம்பேடு வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கிண்டி கத்திபாரா தொடங்கி விமான நிலையம், பல்லாவரம் , தாம்பரம், பெருங்களத்தூரில் மாலை வேளையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால், மக்கள் தங்கள் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாற்றுப்பேருந்தில் செல்வது கஷ்டமாக இருக்கும். வயதானவர்களுக்கும் கடினமாக இருக்கும். தற்போதைய நிலையில் புறநகர் ரயில்களில் ஏறி மாறிக்கொள்ளலாம் என்றால் அங்கு இன்னமும் ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை.

வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்னைக்கு வெளியே அமைந்து வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைவதற்கான போக்குவரத்து வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இந்நிலையில்தான் சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்திற்கு சென்னையின் மையப்பகுதிகளில் இருந்து எத்தனை ரூட்களில், எவ்வளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்த சென்னை மக்களும் தென்மாவட்டங்கள் செல்ல கிளாம்பாக்கம் தான் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே அமைச்சர் சேகர்பாபு அண்மையில் கூறும் போது, "புதிதாக ரெடியாகி வரும் கிளாம்பாக்கம் பஸ் முனையம், பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த பஸ் முனையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைத்து உள்ளார்கள். ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே ஜூலை இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்க உள்ளோம்" என்றார்.

When will Kilamakkam Omni Bus Stand open?

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' எனும் பெயரில் பயன்பாட்டுக்காகத் திறக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் வெள்ளிக்கிழமை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா,போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், துணை ஆணையர் நெல்லையப்பன், இணை ஆணையர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனையின்போது, கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படும்போதே ஆம்னி பேருந்து நிலையமும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த உரிமையாளர்கள், அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது'' என கோரிக்கை வைத்தார்கள்.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது ஆம்னி பேருந்து நிலையத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், பேருந்து வந்து பயணிகளை ஏற்றுவதற்கான இடம் (பஸ் பே) மட்டுமே தயாராக உள்ளது. பேருந்து பராமரிப்புக்கான இடம், அலுவலகம் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+