"பற்றிய நெருப்பு".. எடப்பாடியை விடுங்க.. தகிக்கும் கமலாலயம்.. "தலை"க்கு தில்ல பாருங்க.. மாஸ் பிளான்
சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், பாஜக படுமும்முரமாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறது.. இதில் 2 தொகுதிகள் குறித்து சில யூகமான தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் பாஜக உள்ளது.. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதையும் உணர்ந்துள்ளது..
எடப்பாடியின் பிடிவாதத்தை, மேலிடம் எப்படி தகர்க்க போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே அமைந்து வருகிறது.. அதேசமயம், அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இணக்கமாகிவிட்ட நிலையில், தேர்தல் வேலையும் சூடுபிடித்துள்ளது.

பாஜக தொகுதிகள்: இதில் பாஜகவை பொறுத்தவரை, சில மாதங்களாகவே, களப்பணிகளை செய்து, அதில் தங்களுக்கு செல்வாக்கு மிக்க டாப் 10 தொகுதிகளை லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கு தந்திருந்தது.. அதன்படி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவே நேரடியாக இறங்கி தேர்தலை சந்திக்கக்கூட வாய்ப்புள்ளதாம்.. இதில் விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தொகுதிகள் எல்லாமே திமுக, அதிமுக கட்சிகள் செல்வாக்கு பெற்ற தொகுதிகள்தான்..
இப்போதைக்கு கூட்டணி உறுதியாகியிருக்கிறது என்றாலும், தொகுதி மற்றும் சீட் விவகாரங்களில் மீண்டும் பாஜக - அதிமுக இடையே சலசலப்பு எழலாம் என்கிறார்கள்.. அதேசமயம், திமுகவைவிட அதிக அளவிலான வாக்குவங்கி அதிமுகவுக்கு எப்போதுமே தமிழகத்தில் உண்டு என்பதால், இந்த வாக்குகளையும் இழக்க விரும்பாது என்கிறார்கள்.. மேற்கண்ட இடங்களில், நீலகிரி தொகுதிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாக தெரிகிறது.
யார் வேட்பாளர்: அதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவிருப்பதாக தகவல்கள் உலவி வந்தபடியே உள்ளன.. பாஜக சீனியர்களே இந்த தகவலை சொல்லி வந்தாலும், எந்த அளவுக்கு இது உண்மை என்று தெரியவில்லை... ஆனால், "மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவர் மண்ணைக் கவ்வுவது உறுதி.. அதுக்கு நாங்க கேரண்டி.. இங்கே வந்து நிற்க வேண்டியது உங்க கடமை.. தரமா தோற்கடிப்பது எங்க கடமை" என காங்கிரஸ் கட்சியினர் இப்பவே ராமேஸ்வரத்தில் போஸ்டரை ஒட்டி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்கள்.
கமலா? மோடியா?: அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி அந்த தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், திமுக கூட்டணியில் கமலை இடம்பெறச்செய்து, ராமநாதபுரத்தில் மநீம தலைவர் கமல்ஹாசனை நிறுத்தவும் ஒரு பிளான் உள்ளதாம்.. காரணம், இந்துத்துவா ஆதரவு மண் என்று ராமநாதபுரத்தை முழுமையாக சொல்லிவிட முடியாது.. இங்கு பெருவாரியான முஸ்லிம்களின் வாக்குகளும் உள்ளன.. இந்த முஸ்லிம்களின் வாக்குகள், பாஜகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகளை அள்ளித்தரும் என்ற கேள்வியும் உள்ளது.. அதேசமயம், பாஜக அதிருப்தி ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் தன்பக்கம் இழுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடலாம் என்று செய்திகள் கசிந்துவருகின்றன.. இப்போதைக்கு கர்நாடக தேர்தல் விஷயத்தில் அண்ணாமலை படுபிஸியாக இருக்கிறார்.. அதேசமயம், தமிழக களஅரசியலில் ஒருகண் அவருக்கு இருந்துகொண்டே இருக்கிறது.. ஆனால், இங்கு கடந்த ஒரு வருட காலமாகவே, களப்பணியை தொடங்கிவிட்டார் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்..
பொன்.ராதா: தொகுதி மக்களை சந்திப்பதும், போனை போட்டு நிர்வாகிகளிடம் பேசுவதும் என படுஸ்பீடில் வேலை பார்த்து வருகிறார்.. இந்த முறையும், குமரி தொகுதி தனக்கே தனக்கு என்று ஸ்கெட்ச் போட்டு தேர்தல் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். எனினும், 70 வயதை கடந்தவர்களுக்கு எம்பி சீட் கிடைப்பது அரிது என்பதால், பாஜகவில் பொன்.ராதாவுக்கு சீட் கிடைக்குமா என்று தெரியவில்லை..

காங்கிரஸ் எம்பி-யாக இருந்த வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலின்போது, பொன்.ராதாவுக்கு வாய்ப்பு தரப்பட்டபோதே அவருக்கு 71 ஆகியிருந்தது.. ஆனாலும் தனக்கு இந்த முறையும் சீட் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறாராம். இப்படிப்பட்ட சூழலில்தான், கன்னியாகுமரி தொகுதியில், அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.. தான் கன்னியாகுமரி போட்டியிட்டால் முடிவு எப்படி இருக்கும் என்று ரகசிய சர்வே ஒன்றை சில நாட்களுக்கு முன்பு எடுத்திருக்கிறாராம் அண்ணாமலை...
ரகசிய ரிப்போர்ட்: அந்த முடிவின்படி, குமரி கடலோர கிராமங்களில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பதாக அந்த ரிப்போர்ட்டில் தெரியவந்ததாம்.. இதையடுத்து, அந்த சமூகத்தை சேர்ந்த சிலருக்கு சில வாக்குறுதிகளை தந்து, அண்ணாமலைக்காக வேலை செய்ய முடியுமா? என்பது போல, உத்தரவாதம் கேட்டு தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறதாம்.. ஆனால், இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டது, உள்ளூர் பாஜகவினருக்கே தெரியாது என்கிறார்கள்.. பொன்.ராதாகிருஷ்ணனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications