For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை இணையதளத்தில் ஓ.பி.எஸ். போட்டோ எங்கே?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை இணையதளத்தில் முதல்வர் என்ற பதவியும் அதற்குரிய நபரின் புகைப்படமும் இல்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 27ம் தேதி கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 28ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மறுநாளே அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Where is O.P.S' photo in TN assembly website?

இந்நிலையில் தமிழக சட்டசபை இணையதளத்தின் முதல் பக்கத்தில் ஆளுநர் ரோசய்யா, சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோரின் புகைப்படங்கள் பதவியின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் முதல்வர் யார் என்று குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் புகைப்படம் பதவி எதுவும் குறிப்பிட்படாமல் உள்ளது.

அதாவது இணையதளத்தில் ஜெயலலிதாவின் பெயர் போட்டு முதல்வர் என்று குறிப்பிட்டிருந்ததை மற்றும் அகற்றியுள்ளனர். ஆனால் புதிய முதல்வரையும் குறிப்பிடவில்லை, அவரது புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிடவில்லை.

அதே சமயம் தமிழக நிதித்துறை இணையதளத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை போட்டு முதல்வர் என்று குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TN legislative assembly website doesn't have a CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X