இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார்: மதுரை ஐகோர்ட் கேள்வி
மதபோதகர் எங்கே பேசினார் என்ற விளக்கத்தை மதுரை கோர்ட் கேட்டுள்ளது.
Recommended Video

மதுரை: இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார் என்பது போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், "ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்று பேசியதாக அவர் மீதுபுகார் எழுந்தது.
[சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85.74.. விரைவில் சதம்.. பேரதிர்ச்சியில் மக்கள்!]

தனிப்படை அமைப்பு
இந்துமத கோவில்களையும் இழிவாகவும் தரக்குறைவாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்மீது பல்வேறு இந்து அமைப்பினர் சார்பாக புகார்கள் வரத் தொடங்கின. இதுசம்பந்தமாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

மோகன் சி லாசரஸ் விளக்கம்
இதற்கு மோகன் சி லாசரஸ், "எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மத்தில்தான் உள்ளனர் என்றும், இந்து மதத்துக்கு எதிராக நான் எதுவுமே பேசவில்லை என்றும் வாட்ஸ்அப் வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார். அத்துடன் ‘‘இந்த விவகாரம் தொடர்பாக கோட்டாறு போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐகோர்ட் கிளையில் மனு
நான், தவறான நோக்கத்தில் யாரையும் விமர்சித்து பேசவில்லை. எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என்று ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

விவரம் இல்லை
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘குறிப்பிடும் இந்த சம்பவம் கடந்த 2014, மார்ச் 18-ம் தேதி சென்னையில் நடந்த ஒன்று ஆகும். ஆனால் கடந்த செப். 23ல் மதுரையில் பேசியதாக சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கை பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மோகன் சி லாசரஸ் எங்கு பேசினார், எப்போது இப்படி பேசினார், எந்த ஊரில் பேசினார் என்ற விபரம் போலீசார் தெரிவிக்கவில்லை.

எங்கே பேசினார்?
கடந்த செப். 23ல் மனுதாரர் இந்தியாவிலேயே இல்லை, அவர் வெளிநாட்டில் இருந்தார்'' என்று கூறினார். இதனை கேட்ட நீதிபதி, மோகன் சி லாசரஸ் எந்த ஊரில், எங்கு, எப்போது இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பேசினார் என்ற விவரங்களை அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்றார். அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications