சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85.74.. விரைவில் சதம்.. பேரதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை விரைவில் செஞ்சுரி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஐந்து மாநில தேர்தல்களில் எதிரொலிக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
[இன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி!]

குறைத்தனர்
கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ரூபாய்ப் 2.50 பெட்ரோல், டீசல் விலையில் குறைக்கப்பட்டது.

ஏமாற்றுவேலை
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு குறைத்த போது இருந்த விலையை மீண்டு எட்டிவிடும். இதற்கு பெட்ரோல் விலையை குறைக்காமலே இருந்திருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏன் குறைப்பது போல குறைத்துவிட்டு இப்படி ஏற்றுகிறார்கள் என்றுள்ளனர்.

இன்றும் ஏறியது
இந்த நிலையில் நேற்று 20 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 24 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.74 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.61 காசுகளாக விற்கிறது.

மிக அதிகம்
மும்பையில் மீண்டும் பெட்ரோல் விலை 90 ரூபாய நெருங்கி வருகிறது. அங்கு பெட்ரோல் விலை 89.01 ரூபாயாக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 82.80 ரூபாயாக உள்ளது. இந்தியாவிலேயே மும்பையில்தான் பெட்ரோல் விலை அதிகம் விற்கிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த விலை செஞ்சுரி வாய்ப்புள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications