சட்டசபைத் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டால் மக்கள் ஆதரவு யாருக்கு? ரிப்போர்ட்டர் சர்வே சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் 5 முனைப் போட்டி ஏற்பட்டால் மக்களின் ஆதரவு யாருக்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44.97% மக்கள் கூறியுள்ளனர். திமுக கூட்டணிக்கே எங்களின் ஆதரவு என்று 38.57% மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் படு பரபரப்பாகவே இருக்கிறது. கூட்டணி அமைக்க அரசியல் கட்சியினர் முட்டி மோதி வருகின்றனர். வருபவர்கள் வரட்டும் என்று ஆளும் கட்சி வேடிக்கை பார்க்க, பாமகவோ எங்கள் தலைமையை ஏற்றுக்கொள்பவர்கள் எங்களுடன் வரலாம் என்று கூற, திமுக, பாஜக, தேமுதிக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி கட்சியினரோ ஆளும் கட்சியை எப்படி வீழ்த்துவது? யாருடன் கூட்டணி சேருவது என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். யாருடன் யார் கூட்டணி என்று முடிவாகாத நிலையில் ஒருவேளை இப்படி கூட்டணி அமைந்தால் எந்த கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.

அதிமுக உடன் தமாகா, பாஜக, சமக இணைந்து ஒரு அணியாகவும், திமுக உடன் தேமுதிக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாகவும், மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும், பாமக உடன் சமுதாய இயக்கங்கள் இணைந்து 4வது அணியாகவும் தேர்தலை சந்தித்தால் மக்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் 5வதாக பாஜக + தேமுதிக + ஐஜேகே + கொங்கு மக்கள் கட்சி + புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து தேஜகூட்டணியை உருவாக்கியுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு எப்படி?

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு எப்படி?

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மொத்தம் 44.97% பேர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் ஆண்கள், பெண்கள், படித்தவர்கள் என தனித்தனியாக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் 42.93% ஆண்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம். 51.04% பெண்கள் அதிமுக கூட்டணிக்கே வாக்களிப்போம் என்று கூறியுள்ளனராம். கிராமங்களில் 43.38 % பேர் அதிமுக கூட்டணிக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனராம். பட்டதாரிகள் 44.39% பேரும், பட்டதாரிகள் அல்லாதவர்களில் 55.01% பேரும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம். நகரங்களில் வசிப்பவர்களில் 46% பேரும், விவசாயிகளில் 39.86% பேரும், கல்லூரி மாணவர்களில் 44.65% பேரும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

திமுக கூட்டணிக்கு ஆதரவு

திமுக கூட்டணிக்கு ஆதரவு

திமுக தலைமையிலான கூட்டணிக்கு மொத்தமாக 38.57 சதவிகிதம் பேர் ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆண்களில் 39.63% பேரும், பெண்களில் 35.41 % பேரும், கிராமங்களில் 37.64% பேரும், நகரங்களில் 39.17% பேரும் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளனராம். பட்டதாரிகள் 38.90% பேரும் பட்டதாரி அல்லாதவர்களில் 32.90% பேரும் கல்லூரி மாணவர்களில் 34.52% பேரும் விவசாயிகளில் 34.52% பேரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாமக கூட்டணி

பாமக கூட்டணி

பாட்டளி மக்கள் கட்சி, சமுதாய இயக்கங்களுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 6.33% ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். விவசாயிகள் 10.39% சதவிகிதம் பேர் பாமகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பட்டதாரிகள் 6.44% பேரும், பட்டதாரி அல்லாதவர்கள் 4.4% ஆதரவு தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் 8.84% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களில் 6.79% பேரும், பெண்களில் 4.97% பேரும் பாமக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். கிராமங்களில் 7.99% மக்களின் ஆதரவும், நகரங்களில் 5.25% மக்களின் ஆதரவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

பாஜக தேமுதிக உடன் உதிரிக் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கு மொத்தம் 5.56% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்கள் மத்தியில் பாஜக கூட்டணிக்கு 4.41% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. ஆண்களில் 5.95% பேரும், கிராமங்களில் 5.83% பேரும், பட்டதாரிகளில் 5.71% பேரும், பட்டதாரி அல்லாதவர்களில் 2.93% பேரும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் 4.47% பேரும், நகரங்களில் 5.39% பேரும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணி

மக்கள் நலக்கூட்டணி

அதிமுக, திமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்று கூறிக்கொள்ளும் மக்கள் நலக்கூட்டணிக்கு மொத்தமே 4.57% சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். 4.70% ஆண்களும் 4.17% பெண்களும், 5.16% கிராம மக்களும், 4.19% நகர மக்களும் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். பட்டதாரிகளில் 4.56% பேரும், பட்டதாரி அல்லாதவர்களில் 4.76% பேரும், கல்லூரி மாணவர்களில் 3.71% பேரும் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+