கமல்ஹாசன் '11வது அவதாரம்'.. பாதிக்கப்படப் போவது யாரு?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலின் வருகையினால் எந்த கட்சிக்கு அதிகம் பாதிப்பு?- வீடியோ

    சென்னை: இதோ வருகிறார், அதோ வருகிறார் என அனைவரது கண்களும் ரஜினியை எதிர்பார்த்திருந்தபோது, நான் வந்துட்டேன்... என்று சர்ப்ரைஸ் கொடுத்தபடி முன்னே பயணித்துக்கொண்டுள்ளார், கமல்ஹாசன்.

    ஜெயலலிதாவின் அந்திமக்காலம் தொட்டே, ஆள்பவர்களுக்கு குடைச்சல் கொடுத்தபடிதான் இருந்தார் கமல். சென்னை பெரு வெள்ளத்தின்போது கமல் கூறிய கருத்தால் கடுப்பாகிப்போன அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல பக்கத்திற்கு வசை மாரி பொழிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இந்த வேலையை இப்போதுள்ள அமைச்சர் ஜெயக்குமார் பார்த்துக்கொள்கிறார். மொத்தத்தில் கமல் தொடர்ந்து ஆள்பவர்கள் கண்ணுக்குள் விழுந்த துரும்பு போல துருத்திக்கொண்டே உள்ளார்.

    வெவ்வேறு கருத்துக்கள்

    வெவ்வேறு கருத்துக்கள்

    அப்படியானால் கமல் கட்சி ஆரம்பித்தால் அது அதிமுகவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்துமா? அப்படி இல்லை என்கிறது கள நிலவரம். இதுபற்றி சமூக வலைத்தளங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்து, அரசியல் பார்வையாளர்கள் கருத்து ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக உள்ளன.

    திமுக ஆதரவாளர்கள் கருத்து

    திமுக ஆதரவாளர்கள் கருத்து

    கமல் கட்சியால் திமுகவுக்கு கணிசமாக வாக்கு இழப்பு ஏற்படுமாம். திமுகவின் தீவிர அனுதாபிகளாக இணையதளத்தில் சுற்றித் திரிந்தவர்கள் பலரும் கடந்த சில நாட்களாக கமல் புராணம் பாடத் தொடங்கியுள்ளனர். திராவிட கொள்கையை முன்னெடுப்பதாக அவர் கூறி வருவது அவர்களை ஈர்த்துள்ளது. கமலின் தீர்க்கமான தொலைநோக்கு பார்வை, பிரஸ் மீட்களில் அவர் பதிலளிக்கும் லாவகம், தமிழ் அறிவு போன்றவை திமுகவில் கணிசமானோரை ஈர்த்துள்ளதை அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் காண்பிக்கின்றன. இருப்பினும், அவர் தனது கொள்கைகளை அறிவித்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என காத்திருக்கிறார்கள். இது திமுகவின் வாக்கு வங்கிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம்தான். ஒருவேளை திமுக-கமல் கட்சி கூட்டணி அமைந்தால் நிலைமை தலைகீழாக மாறலாம்.

    பாஜக, காங்கிரஸ் நிலை

    பாஜக, காங்கிரஸ் நிலை

    பாஜகவினர், நாத்தீகம், திராவிடம் பேசும் கமலை எதிரியாகவே பார்க்கிறார்கள். ரஜினி கட்சி வேண்டுமானால் பாஜகவுக்கு இருக்கும் சிறிதளவு வாக்கு வங்கியையும் ஈர்க்கலாமே தவிர, கமலால் அந்த கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் தொண்டர்களிடமும் இப்போது வரை கமல் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை.

    அதிமுக நிலை

    அதிமுக நிலை

    அதேநேரம், கமல் கட்சியால் அதிமுகவினர் அணி மாறும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அதிமுகவினர் ஆட்சி கால முடிவில் வேண்டுமானால் அணிமாறலாம், அதுவும் கூட ரஜினி அணிக்கு வேண்டுமானால் மாறலாம் என்பதைத்தான் அவர்களின் சோஷியல் மீடியா பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு காரணம், கமல் கொள்கை சார்ந்த அரசியல்வாதியாக உள்ளார். அதிமுகவினரோ பிம்ப அரசியலுக்கு பழகியவர்கள்.

    ஒருவேளை இப்படியானால்

    ஒருவேளை இப்படியானால்

    இன்னும் ஒரு பார்வையும் உள்ளது. கமல் கட்சியால் கமலுக்குத்தான் பாதிப்பு என்று கூறும் அரசியல்வாதிகளும் உள்ளனர். பிம்ப அரசியலுக்குத்தான் தமிழகத்தில் செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதையும், இரு திராவிட கட்சிகளும் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், தேர்தல் அரசியலில் அவர்களை மீறி கமல் செல்வாக்கு பெற முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கமலோ, தமிழக இளைஞர்கள் மாறியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறார். அதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+