கட்சி ரெடியாயிடுச்சா... ரஜினி, தமிழருவி மணியனின் திடீர் சந்திப்பு ஏன்?

நடிகர் ரஜினிகாந்த இந்த முறை கட்டாயம் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து கூறி வரும் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரஜினி, தமிழருவி மணியனின் திடீர் சந்திப்பு ஏன்?- வீடியோ

    சென்னை : ரஜினியின் அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது, அவர் இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து கூறி வருகிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். இந்நிலையில் இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்து தமிழருவி மணியன் பேசியுள்ளது மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

    கடந்த மே மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். ரசிகர்களுடனான சந்திப்பின் இறுதி நாளில் நாட்டில் நல்ல பல தலைவர்கள் இருக்கிறார்கள் ஆனால் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார்.

    போருக்குத் தயாராக இருங்கள், போர் வரும் போது சொல்கிறேன் என்று தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஒரு தீப்பொறியை பற்ற வைத்துவிட்டுப் போனார். இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் உலவின.

    பிறந்தநாளில் ஏமாற்றிய ரஜினி

    பிறந்தநாளில் ஏமாற்றிய ரஜினி

    கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று நவம்பர் 12ம் தேதி காலை முதலே ரசிகர்கள் போயஸ் கார்டனில் கிடையாய் கிடந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதிகாலையிலேயே போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு போனவர் ரசிகர்களை சந்திக்கவே இல்லை.

    ரசிகர்களை சந்திக்கும் ரஜினி

    ரசிகர்களை சந்திக்கும் ரஜினி

    இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதத்தின் போது ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பான காலகட்டத்தில் தமிழருவி மணியனை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதே போன்று இன்றும் தமிழருவி மணியன், ரஜினி ஆலோசனை நடைபெற்றுள்ளது.

    2017லாவது முற்றுப்புள்ளி வைப்பாரா

    2017லாவது முற்றுப்புள்ளி வைப்பாரா

    ரஜினிகாந்தால் தான் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும். அவரும் கமலும் அரசியலுக்கு வந்தால் புதிய அரசியல் பாதை உருவாகும் என்று சொல்லி வருகிறார் தமிழருவி மணியன். ரசிகர்களை சந்திக்கும் நிலையில் ரஜினி நடத்தும் இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறையாவது சஸ்பென்ஸ்க்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ரஜினிகாந்த் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    குஷியில் ரசிகர்கள்

    குஷியில் ரசிகர்கள்

    ஒருவேளை ரஜினியின் கட்சிக் கொடி ரெடியாயிடுச்சா அது குறித்த ஆலோசனையா இது என்று சோர்ந்து கிடந்த ரஜினி ரசிகர்கள் மீண்டும் குஷியாகியுள்ளனர். என்ன தலைவா 2017லாவது 20 ஆண்டாக வருவேன் வருவேன்னு சொல்ற அரசியல் களத்துக்கு வருவீங்களா?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+