கவனிச்சீங்களா மக்களே... வானில் வளைத்து வளைத்து கட்டப்படும் மணல்வீடுகள்.. மழையாகுமா?
வானில் வளைத்து வளைத்து மணல்வீடுகள் கட்டப்படுவதால் விரைவில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: வானில் வளைத்து வளைத்து மணல்வீடுகள் கட்டப்படுவதால் விரைவில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் பல மாநிலங்களை மிரட்டிய தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் நிறைவு பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அன்றைய நாளிலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அக்டோபர் 2ஆம் வாரம்
இந்நிலையில் இதுவரை வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மாறாக அக்டோபர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தகவல் பரவி வருகிறது.
[என் பேச்சு புரியவில்லையா?.. அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிக்ஸ்னரி அனுப்பிடுவோம்- கமல் நக்கல் ]

தமிழகத்தின் தேவை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க கூடியது. தமிழகத்தின் பெரும்பாலான தண்ணீர் தேவையை வட கிழக்கு பருவமழை பூர்த்தி செய்யும்.

எதிர்பார்ப்பு
இதனால் எப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல் வெயிலின் தாக்கமும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் கதை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வானில் வெண் மேக கூட்டங்கள் திரண்டு கூட்டம் கூட்டமாக பளிச்சென காட்சியளிக்கின்றன. நீள வானில் வெள்ளை நிற மேகக்கூட்டங்கள் ரம்மியமாக காட்சியளித்தாலும் இதற்கு தனிக்கதையே கூறப்படுகிறது கிராமப்புறங்களில்.

வானில் மணல் வீடு
அதாவது, வானில் திரண்டிருக்கும் இந்த வெண் மேகக்கூட்டங்களை பார்க்கும் மக்கள் வானில் மணல் வீடு கட்டப்படுகிறது என்கின்றனர். இந்த வெண் மேகங்களே கரு மேகங்களாக மாறி மழையை கொடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

மணல் வீடுகள் மழையாகுமா?
வானம் தெளிவாக இருப்பதை விட இதுபோன்று ஆங்காங்கே வெண்மேகங்கள் திரண்டிருந்தால் விரைவில் நல்ல மழை பெய்யும் என்றும் கூறுகின்றனர் மக்கள். இதனால் கடந்த சில நாட்களாக வானில் வெண் மேகக்கூட்டங்கள் தென்படுவதால் விரைவில் நல்ல மழை பெய்யும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர் கிராமப்புற மக்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.. மணல் வீடுகள் மழையாகுமா என்று...!!
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications