கொம்பன் படத்திற்கு எதிராக கிருஷ்ணசாமிக்கு கொம்பு சீவியது யார்?
டாக்டர் கிருஷ்ணசாமி புண்ணியத்தில் கொம்பன் படத்திற்கு ஓசியில் விளம்பரம் செய்து விட்டார்கள். இன்றைக்கு நீதிபதி சொல்லப்போகும் தீர்ப்பை வைத்துதான் ஏப்ரல் 2ல் கொம்பன் ரிலீஸ் ஆவாரா என்பது தெரியவரும்.
நாட்டில் பேசி தீர்க்க எத்தனையோ பிரச்சினைகள் இருக்க சட்டசபையில் கூட கொம்பனை பேசி டாக்டர் கிருஷ்ணசாமி பேசும் அளவிற்கு கொம்பு சீவி விட்டது யார் என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும் கேள்வியாகும்.

மோதும் வாரிசுகள்
அதாகப்பட்டது. ஏப்ரல் 2ஆம் தேதி மூன்று வாரிசுகள் படம் வெளியாகிறது. இதில் விஜயகாந்த் வாரிசு சண்முகப்பாண்டியனின் சகாப்தம், சிவகுமாரின் வாரிசு கார்த்தியின் கொம்பன், மு.க.ஸ்டாலின் வாரிசு உதயநிதியின் நண்பேண்டா என மூன்றும் மோதுகின்றன.

கொம்பனுக்கு எதிராக
இதில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்த கையோடு இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

சட்டசபையில்
கொம்பன் படம் குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறிய கிருஷ்ணசாமி, இதுபற்றி சட்டசபையிலும் பேச முயன்றார்.

காரணம் என்ன?
கமலின் சண்டியர் படத்திற்குப் பிறகு கொம்பன் படத்திற்குத்தான் தீவிரம் காட்டி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்த அளவிற்கு அவர் தீவிரம் காட்ட காரணம் திமுகதான் என்கின்றனர்.

உதயநிதிக்கு போட்டியா?
ஏனெனில் ஏப்ரல் 2ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நண்பேண்டா படம் வெளியாவதால் அதே நாளில் வெளியாகும் கொம்பன் படம் சரியான போட்டியாக கருதப்படுகிறது.

சகாப்தம் எப்படி?
அதேசமயம் விஜயகாந்தின் மகன் நடித்துள்ள சகாப்தம் படம் பற்றிய உதயநிதி தரப்பு கண்டுகொள்ளவில்லையாம். அவர்கள் கண் வைத்திருப்பது கொம்பன் படத்தின் மீதுதான்.

இந்த வார ரேஸில்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மெட்ராஸ் படத்தின் மூலம் ஒரு பிரேக் கொடுத்தார் கார்த்தி. அவர் பெரிதும் எதிர்பார்த்திருப்பது கொம்பன் படம். ஏனெனில் பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு கிராமத்து பாணியில் கார்த்தி நடித்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

எப்படியாவது தடுக்கணுமே
என்னதான் பக்கத்தில் நயன்தாரா இருந்தாலும் கார்த்தி -லட்சுமேனன் ஜோடியைப் பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போயுள்ளதாம் உதயநிதி தரப்பு. எனவேதான் டாக்டர் கிருஷ்ணசாமியை வைத்து காய் நகர்த்துகின்றனராம் ஹீரோவுக்கு நெருக்கமான திமுக தரப்பினர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

கொம்பன் சீறுவாரா?
இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு கொம்பன் வெளிவருவாரா? வெள்ளிக்கிழமை ரேஸில் பங்கேற்பாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications