Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்த ‘நீயா நானா’ பிரபலமா? யார் இந்த சந்திர பிரபா? டாக்டர் வேற!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளராக நாம தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள சந்திர பிரபா, 'நீயா நானா' விவாத நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் ஒரு டாக்டரும் கூட.

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

Who is chandra prabha who contests as a NTK candidate in ramanathapuram lok sabha constituency

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், பிரதான கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி உடன்பாடுகளே இன்னும் எட்டப்படாத நிலையில் தடாலடியாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வேட்பாளர்களில் 50% பெண்கள், எந்த கட்சிகளுடனும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டி என்ற கொள்கையுடன் தற்போது வரை 31 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய சீமான் திட்டமிட்டுள்ளார்.

ராமநாதபுரம் வேட்பாளர் சந்திரபிரபா: தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 31 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Who is chandra prabha who contests as a NTK candidate in ramanathapuram lok sabha constituency

ராமநாதபுரம் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் சந்திர பிரபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சந்திர பிரபா, எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த மருத்துவர். அவரை வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் சீமான். நாதக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சந்திர பிரபா, ஏற்கனவே ஊடகம் வாயிலாக பரவலாக அறிமுகம் ஆனவர்.

நீயா நானா பிரபலம்: சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில், விவாகரத்தான பெண்கள், அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இதில், பெண் மருத்துவரான சந்திரபிரபா விவாகரத்தான் பெண்கள் பிரிவில் கலந்துகொண்டு பேசினார். இதில் விவாகரத்தான பெண்கள் சுயமாக நின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசியிருந்தார் சந்திர பிரபா.

மேலும், எதிர் தரப்பில் ஒரு நபர் நாங்கள் விதவை பொண்ணை ஏற்றுக்கொள்வோம். ஆனால் விவாகரத்து ஆனவர்களை ஏற்க மாட்டோம். ஏனென்றால் விவாகரத்தான பெண்கள் மற்ற பெண்களிடம் பேசும்போது சின்னதா இருக்கிற சண்டைய கூட பெருசு பண்ணி, குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பெண்ணை விலக்கி வச்சிருவாங்களோனு நாங்க பயப்படுறோம் என்று கூறினார்.

Who is chandra prabha who contests as a NTK candidate in ramanathapuram lok sabha constituency

அதற்கு சந்திர பிரபா, "உங்களுடைய சுய பத்தி எங்க போயிருக்கு? ஏன் இப்படி ஒரு உதாரணத்தை எடுக்கிறீர்கள். எனக்கு நீங்க சொல்றது கொஞ்சம் கூட புரியல. நீங்க சொல்றீங்க விவாகரத்து ஆனவங்க ஒரு பிராப்ளம் என்று.. ஆனால் பிராப்ளம் அல்லாத பெண்களுக்கு இந்த சமூகம் என்ன செஞ்சது?" என்று ஆவேசமாக கேள்வி கேட்க, ஒட்டுமொத்த எதிர் தரப்பும் வாய் திறக்காமல் இருந்தது.

ட்ரெண்டான சந்திர பிரபா பேச்சு: இதற்கு முன்னதாக, சில பல ஆண்டுகளுக்கு முன்பும், நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி இருந்தார் சந்திர பிரபா. சமையல் கட்டை ஆளும் பெண்கள் Vs சமையல் செய்ய பிடிக்காத பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த விவாதத்தில், "சமையல் மூலமாக கணவனை, மகனை அனைவரையும் எங்கள் கைக்குள் வைத்திருக்கிறோம். இரு அஸ்திரங்கள் எங்கள் கைகளில் இருக்கிறது. கடவுள் கொடுத்த இந்த அழகான உடல், என் தாய் கற்றுக் கொடுத்த சமையல் கலை, இரண்டும் இருக்கிறது" எனப் பேசி இருந்தார்.

சமீபத்தில், சந்திர பிரபா பங்கேற்ற நீயா நானா விவாத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நீயா நானாவில் அவர் பேசியதையும் குறிப்பிட்டு பலர் விமர்சித்திருந்தனர். இப்படியாக, மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ள மருத்துவர் சந்திர பிரபாவுக்கு லோக்சபா தேர்தலில் சீட் கொடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+