ஜெ. கொடுத்த ஐடியாவால்தான் ஹிலாரி போட்டியிடுவதாக சொன்னவர்.. இதோ இவர்தான்!
சென்னை: அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டனுக்கு ஐடியா கொடுத்ததே தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என ஒரே போடாகப் போட்ட குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ. சாந்தி ஏ. ராமு, தேமுதிகவில் மாவட்ட செயலராக இருந்து அதிமுகவுக்கு தாவியவர்.. !
தமிழக சட்டசபையில் பரபரப்பாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது திடீரென அமைதி நிலவியது... குன்னூர் எம்.எல்.ஏ. ராமு பேசியதைக் கேட்டு அதிமுக உறுப்பினர்களே வாயடைத்துப் போய்விட்டனர்.

ஆம் அவர் பேசியது, அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டனுக்கு ஆலோசனை சொன்னதே முதல்வர் ஜெயலலிதாதான் என்று ஒரே போடாகப் போட்டார்... யாரும் எதிர்பார்க்காத இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படி பேசிய குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ஏ. ராமு படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக 2 தொழிற்சாலைகள் உள்ளன. இவருடைய சொந்த ஊர் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு கேத்திகேரி கிராமம். இவரது மனைவி பெயர் புஷ்பா.
தேமுதிகவில் நீலகிரி மாவட்ட செயலராக இருந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். சட்டசபை தேர்தலின் போது "அம்மாவின் விருப்ப தொகுதி குன்னூர்; உங்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும்" என ரொம்ப உஷாராகவே பிரசாரம் செய்தார்.
தற்போது வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்த ராமு அதிரடியாக ஹிலாரி கிளிண்டனுக்கு ஐடியா கொடுத்ததே அம்மாதான் என ஒரே போடாகப் போட்டு சில நிமிடங்களில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்துவிட்டார்...
அப்புறம் என்ன அமைச்சர் பதவி "ரெடி"!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications