ஜெயலலிதாவின் வாரிசு யார்? பதிலளிக்க வருமான வரித்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்து வரிக்கணக்கு தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என அறிக்கை அளிக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு, ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரிக்கணக்கு செலுத்துதல் தொடர்பான ஒரு வழக்கில்தான் ஹைகோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக வருமான வரித்துறை உள்ளது.

எனவே வருமான வரித்துறைக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது, ஹைகோர்ட்.
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்கலை தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, வாரிசு குறித்து ஜெயலலிதா உயில் எழுதியுள்ளாரா என்பது குறித்து வருமான வரித்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது ஹைகோர்ட்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications