அசினை திருமணம் செய்யப் போகும் ராகுல் ஷர்மா யாருன்னு தெரியுமா?
சென்னை: நடிகை அசினை திருமணம் செய்து கொள்ளப் போகும் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா பற்றிய விவரங்களை பலரும் கூகுள் செய்து கொண்டிருக்கின்றனர்.
கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் அசின். கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த ஏ.ஆர். முருகதாஸ் அசினை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார். அத்தோடு பாலிவுட் பிடித்துப் போக அசின் ஜாகையை மும்பைக்கு மாற்றிவிட்டார்.
மும்பையில் தங்கிய அசினுக்கு பாலிவுட்டில் மவுசு இல்லை. இந்நிலையில் தான் அவர் தனது காதலரான மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்ய உள்ளார்.

யாருப்பா அது?
நம்ம அசின் திருமணம் செய்யும் ராகுல் ஷர்மா யாருப்பா என்று பலரும் அவரைப் பற்றி கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ராகுல் யார் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மைக்ரோமேக்ஸ்
ராகுல் ஷர்மா கடந்த 2000ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானா மாநிலம் குர்காவ்னில் உள்ளது.

ராகுல்
ராகுல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். அது தவிர அவர் கனடாவில் உள்ள சாஸ்கட்செவான் பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்துள்ளார்.

சிஇஓ
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார் ராகுல். இந்தியாவில் நோக்கியா செல்போன்களின் வினியோகஸ்தராக சிறுது காலம் இருந்த மைக்ரோமேக்ஸ் 2008ம் ஆண்டில் இருந்து செல்போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பார்ச்சூன்
2014ம் ஆண்டு 40 வயதுக்குள் பணக்காரர்களான 40 பேர் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டது. அதில் ராகுல் பெயரும் அடக்கம். 38 வயதாகும் ராகுல் நேரம் கிடைக்கும் போது பேட்மிண்டன் விளையாடுவார்.

ஜப்பானிய உணவு
வேலைக்கு வருபவர்கள் சூட் அணிந்திருந்தால் அது ராகுலுக்கு பிடிக்காதாம். அவருக்கு பிடித்தது ஜப்பானிய உணவு வகைகள் ஆகும். ராகுல் தனக்கு 15 வயது இருக்கையில் ராக் இசை நிகழ்ச்சியை காண 14 கிலோமீட்டர் நடந்து சென்றார். அப்போது அவரிடம் டாக்சியில் செல்லும் அளவுக்கு வசதி இல்லை.

அக்ஷய் குமார்
ராகுல் ஷர்மா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார். அக்ஷய் மூலம் தான் அசினும், ராகுலும் சந்தித்து காதலித்துள்ளனர். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செல்போன்களை தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியபோது அது குறித்த விளம்பரத்தில் நடித்தவர்கள் அக்ஷயும், அவரது மனைவியும் தான். கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மைக்ரோமேக்ஸ் பிராண்ட் அம்பாசிடராக ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications