தளபதி யார்? விஜயா? ஸ்டாலினா?.. உதயநிதி ஸ்டாலினின் அல்டிமேட் பதில்!

தமிழகத்தில் யார் தளபதி திமுக தலைவர் ஸ்டாலினா, நடிகர் விஜயா என்ற கேள்விக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தளபதி யார் ? உதயநிதியின் பதில் இது தான்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் யார் தளபதி திமுக தலைவர் ஸ்டாலினா, நடிகர் விஜயா என்ற கேள்விக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து இருக்கிறார்.

    தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறார் நடிகர் விஜய். சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் அரசியல் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதில் அவர் தனது முதல்வர் ஆகும் ஆசையை வெளிப்படுத்தினார். இந்த பேச்சை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விஜய் டிரெண்ட் ஆகியுள்ளார்.

    தளபதி - இளைய தளபதி

    தளபதி - இளைய தளபதி

    நடிகர் விஜய் தன்னுடைய பெயருக்கு முன் இளைய தளபதி என்ற பட்டத்தை பயன்படுத்தி வந்தார். அதன்பின் கடந்த சில படங்களாக இளைய தளபதிக்கு பதிலாக தளபதி என்று மட்டும் பயன்படுத்தி வருகின்றார்.

    [தலைவன் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.. சரமாரியாக விளாசிய விஜய் ]

    அரசியல் உலகில்

    அரசியல் உலகில்

    அதே சமயம் திமுக தலைவர் ஸ்டாலின் தளபதி என்றுதான் அரசியல் உலகில் அழைக்கப்படுகிறார். திமுக தொண்டர்கள் இவரை தளபதி என்றுதான் அழைத்து வருகிறார்கள். இவர் திமுக தலைவர் ஆன பின்பும் கூட, அவரை அன்பாக தளபதி என்று சிலர் அழைத்து வருகிறார்கள்.

    கேள்வி கேட்டார்

    இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், ''விஜயை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர்..பார்த்து செய்யுங்க சார்'' என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    உதயநிதி பதில்

    இதற்கு உதயநிதி ஸ்டாலின் ''ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !'' என்று பதில் அளித்துள்ளார். மிகவும் நேர்த்தியாக பதில் சொல்லி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

    ரஜினி ரசிகர்கள்

    ரஜினி ரசிகர்கள்

    இந்த நிலையில் சில ரஜினிகாந்த் ரசிகர்கள் இதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ரஜினிதான் முன்பில் இருந்தே தளபதி. அவர்தான் தளபதி படத்தில் நடித்தது. இப்போது அரசியலுக்கும் வந்துவிட்டார். அதனால் அவர்தான் தளபதி என்று விவாதம் செய்து இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+