முதல்வர் யார்? அதிமுகவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.. துரைமுருகன் கிண்டல்
திமுக ஆட்சியில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: அ.தி.மு.க.வில் முதல்வர் யார்? என்பது குறித்தே ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தி.மு.க. சார்பில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று மத்திய அரசை அணுகவில்லை.

தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வில் முதல்வர் யார்? என்பது குறித்தே ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. முதல்வர் யார்? என்பது வருகிற 23-ந் தேதிக்கு பிறகுதான் தெரியும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்த போதும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு, நீதிமன்றத்தில் வழங்கிய பிரமாண பத்திரத்தில் ஜல்லிக்கட்டை கலாசார பண்பாட்டு விளையாட்டு என்று குறிப்பிடாமல் மதம் சார்ந்த விளையாட்டு என்று தவறுதலாக தெரிவித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications