அதிமுக, தனிக்கட்சி, மீண்டும் அதிமுக, பாஜக.. கடைசியாக காங்.-ல் கரைந்த திருநாவுக்கரசர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் அதிமுக, தனிக்கட்சி, மீண்டும் அதிமுக, பாஜக என பல கட்சிகளைத் தாண்டி 2009-ல்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்.
67 வயதான திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர். 1977-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் .ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக, அமைச்சராக பணியாற்றினார்.

அதிமுக உடைந்தது ஜெயலலிதா தலைமையிலான அணியில் இருந்தார் திருநாவுக்கரசர். பின்னர் அதிமுகவை விட்டு விலகி எம்.ஜி.ஆர். அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.
இதனால் எம்ஜிஆர் அதிமுகவை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தார். ஆனால் அவரால் அதிமுகவில் நீடிக்க முடியவில்லை. மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். வாஜ்பாய் அரசில் மத்திய கப்பல் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யாக, தேசிய செயலராகவும் திருநாவுக்கரசர் இருந்தார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் திருநாவுக்கரசர். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருக்கிறார் திருநாவுக்கரசர். கட்சியில் சேர்ந்த 7 ஆண்டுகளிலேயே மாநில தலைவர் பதவியை கைப்பற்றிவிட்டார் திருநாவுக்கரசர். பாஜகவிலும் இதைத்தான் எதிர்பார்த்து வந்தார் திருநாவுக்கரசர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications