2 வருடத்திற்கு முன்பு திமுக.. பிறகு மதிமுக.. இப்ப விலகல்.. யார் இந்த நடிகர் டாக்டர் சரவணன்?
சென்னை: மதுரையைத் தாண்டி யாருக்குமே தெரிந்திராத ஒருவர் இன்று தமிழகத்தில் உள்ள நண்டு சுண்டுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு மாறியுள்ளார். அவர்தான் டாக்டர் சரவணன். கூட்டத்தோடு கூட்டமாக இவரும் மதிமுகவை விட்டு விலகி செய்திகளில் அடிபட்டுள்ளார்.
சரி யார் இந்த சரவணன். இவர் இப்போது டாக்டர் மட்டுமல்ல, நடிகரும் கூட. மதுரையில் டாக்டராக வலம் வந்த இவர் திடீரென நடிப்புக் களத்திற்குள் புகுந்தார். கூடவே உதவியாக இருக்குமே என்ற எண்ணத்தில் அரசியலிலும் காலெடுத்து வைத்தார்.
முதலில் திமுகவில் சேர்ந்த அவர், திமுகவின் "கொள்கை, தாத்பர்யம்" உள்ளிட்டவற்றை கற்று முடிப்பதற்குள்ளாகவே அதிலிருந்து விலகி மதிமுகவில் இணைந்தார். அந்தக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளைப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே இப்போது அதை விட்டும் வெளியேறியுள்ளார்.

சரவணா ஹாஸ்பிட்டல்
மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா ஹாஸ்பிட்டல் இவருடையதுதான். இந்த மருத்துவமனையில் காசு இல்லாமல் வருபவர்களுக்கு இலவச வைத்தியம் செய்கிறாராம் டாக்டர் சரவணன்.

"அன்பு"க்கு ரொம்ப குளோஸ்
இந்த டாக்டரும், மதுரையைச் சேர்ந்த, திரையுலகையே ஒரு காலத்தில் நடுநடுங்க வைத்தவருமான பைனான்சியர் அன்புச் செழியனும் ரொம்ப நெருங்கிய தோஸ்த்துகளாம்.

அன்பு சொன்னால் தட்ட மாட்டார்
அன்புச் செழியன் என்ன சொன்னாலும் தட்ட மாட்டாராம். அதேபோல சரவணன் கேட்டால் இல்லை என்று சொல்ல மாட்டாராம் அன்புச் செழியன். அப்படிப்பட்ட "முஸ்தபா முஸ்தபா" டைப் நண்பர்களாம் இருவரும்.

கோடிக்கணக்கில் முதலீடு
அகிலன் என்ற படத்தில்தான் முதல் முறையாக நடிகராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் டாக்டர் சரவணன். இப்படத்திற்காக பணத்தை வாரி இறைத்தார். மதுரை நகர் எங்கும் இந்தப் படத்தின் கட் அவுட், தட்டி வைத்து கலக்கினார். எல்லாவற்றிலும் அன்புச் செழியனின் பண முதலீடும் மறைந்திருந்ததாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

அரசியலிலும்
நடிக்க வருவதற்கு முன்பு அரசியலிலும் புகுந்திருந்தார் சரவணன். மதுரை திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால் இவர் அரசியலில் இருந்தது மதுரையில் மட்டுமே தெரிந்த கதையாக இருந்தது.

மதிமுகவுக்கு ஜம்ப்
ஆனால் திடீரென மதிமுகவுக்குத் தாவினார் சரவணன். ஏன் திமுகவை விட்டு விலகினார், ஏன் மதிமுகவில் இணைந்தார் என்பதற்கு காரணமே தெரியவில்லை. இந்த நிலையில் இப்போது திடீரென மதிமுகவை விட்டு விலகியுள்ளார் சரவணன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications