வெறும் 2 மணி நேரம் கொடுங்க.. சீப்பை தூக்கிய பாஜக.. சீமான் கட்சியிலிருந்து ஒரு குரல்.. அட மயிலாடுதுறை
மயிலாடுதுறை: வெறும் 2 மணி நேரம் எங்களுக்கு போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்" என்று உறுதியுடன் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள்.
சீர்காழியில் செய்தியாளர்களிடம் காளியம்மாள் பேசியதாவது: "மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். சிறு வயது முதல் இந்த மண்ணில் பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகளைப் பார்த்து வருகிறேன். இந்த மண்ணில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற அதிமுக, காங்கிரஸ், திமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் இப்படி எந்த பிரச்சனைகளை பற்றியும் இவர்கள் நாடாளுமன்றத்தில் பேசப்போவதில்லை. அதான் நம்ம பிரச்சனைக்கு நாமே குரல் கொடுக்க வேண்டும் என்பதால், இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.
அடிப்படை வசதிகள்: கடற்கரை பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 4.5 லட்சம் ஹெக்டர் கடல் பரப்பை விற்று விட்டதாக சொல்றாங்க.. காவிரியில் குறுக்கே அணைக் கட்டுவோம் என்று கர்நாடக எம்பி சொல்கிறார்.. ஆனால், இந்த திமுக எம்பிக்கள் 39 பேருமே இது குறித்து வாய் திறக்கவில்லை..
தேர்தலில் 6.7 சதவீத வாக்கு வாங்கியுள்ள நாம் தமிழர் கட்சி, கூடுதலாக 1.3 சதவீதம் வாங்கி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறக் கூடிய ஒரு கட்சி.. 5 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால், 2 தேர்தல்களை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டும் டார்ச் லைட் சின்னத்தை தந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.. அதென்ன நாம் தமிழர் கட்சிக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது?
விவசாய சின்னம்: இதெல்லாம் பாஜகவின் திட்டம்.. தேர்தல் ஆணையம் மூலம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். முதலில் ரெய்டு நடத்தி மிரட்டி பார்த்தார்கள்.. இப்போது சின்னத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள்..
விவசாயி சார்ந்த பிரச்சினைகள், மக்கள் பிரச்சனைகளை பேசி தமிழகத்தில் 3 இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. ஆனால் இதனை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழகத்தில் தான் பெரிய கட்சியாக மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக, 4வது இடத்திலிருநது முன்னேறுவதற்காக இப்படியெல்லாம் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளது.
தேர்தல்: மக்களவைத் தேர்தல், சட்டமன்றத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல்களை ஒரு சின்னத்தில் நாங்கள் அணுகியுள்ளோம். ஆனால் 2 வருடங்கள் மட்டுமே ஆன ஒரு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்..
3 வருடங்களுக்கு குறைவான கர்நாடகத்தில் உள்ள ஒரு லெட்டர்பேடு கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.. முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாக செல்லும் தேர்தல் ஆணையம் எத்தனை நிமிடங்கள் முன்னுரிமை என வெளிப்படையாக சொல்லவேண்டும்.
ஆனால், எங்களுக்கு இந்த சின்னத்தின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. காலம்காலமாக உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை வைத்து மக்களை திசை திருப்பி வைத்திருந்ததோடு, இது நல்ல கட்சியா, நல்ல வேட்பாளரா, மக்களுக்கு நன்மை செய்வார்களா? என என்றெல்லாம் எதுவுமே பார்க்காமல் சின்னம் தான் பிரதானம் என்று வைத்திருந்தார்கள்.
சின்னம்: எங்களுக்கு சின்னமே எங்கள் அண்ணன் சீமான்தான். தேர்தல் ஆணையம் சொன்னதுபோல், போல் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டு விவசாயிக்கு பாதுகாப்பாக உள்ள நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் இயற்கையாகவே கிடைத்திருந்தது. அதனை பாஜக அபகரித்து வைத்துக்கொண்டுள்ளது.
சீப்பை மறைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கிறார்கள். எங்களுடைய சின்னம் எங்களுடைய அடையாளமாக எங்களுடைய தலைவர் உள்ளார்.
வெறும் 2 மணி நேரம் எங்களுக்கு போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்" என்று உறுதியுடன் சொல்கிறார் காளியம்மாள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications