வெறித்தனம்..சித்தாளை நிர்வாணப்படுத்தி.. அதுவும் பிளேடால்.. டக்குனு மாயமான கொடூரன்..திருவள்ளூர் ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: ஆடையின்றி நிர்வாணமாக ரயில்வே ஸ்டேஷனுக்குள், குத்துயிரும் குலையுயிருமாக ஓடிவந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. அந்த பெண் யார்? என்ன சம்பவம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இத்தனைக்கும் தமிழக காவல்துறை விழிப்புணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது..

ஆபரேஷன் கஞ்சா: ஆபரேஷன் கஞ்சா முதல் கள்ளச்சாராயம் வரை ஒவ்வொரு விஷயத்திலும், தீவிர நடவடிக்கையை கையில் எடுத்து வருகிறது. குற்றவாளிகள் தொடர்ந்து கைதாகி கொண்டே இருக்கிறார்கள்.

எனினும், குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார்களை வாசித்து வருகின்றன.. நேற்றுமுன்தினம்கூட திருவள்ளூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குள்ளேயே ஒரு கொடூரம் நடந்துள்ளது.. இந்த ரயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.. எந்நேரமும் பயணிகளின் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும்.. நைட் 9 மணி அளவில், வழக்கம்போல் பிஸியாகவே இருந்திருக்கிறது இந்த ஸ்டேஷன்.

Who is this woman and what happened actually in Thiruvallur Railway Station

3வது பிளாட்பாரம்: அப்போது, ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது ப்ளாட்பாரத்திலிருந்து, பெண் ஒருவர் நிர்வாணமாக ரயில் நிலையம் நோக்கி ஓடிவந்துள்ளார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த , ரயில்வே போலீசார், அந்த பெண்ணை பிடித்து, ஆடை அணிவித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அந்த பெண்ணின் உடம்பெல்லாம் பலத்த காயங்கள் இருந்திருக்கின்றன.. கிட்டத்தட்ட 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது...

உடனடியாக சிகிச்சை ஆரம்பமானது. அந்த பெண் ஆபத்தான நிலையிலும், மயங்கிய நிலையிலும் இருந்ததால், இந்த சம்பவம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை. திருவள்ளூர் டவுன் போலீஸ் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டபோது, பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சித்தாள்: திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்த பெண்.. 45 வயதாகிறது.. சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து, 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.. அண்ணனூரில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அர்ஜுனன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.. அர்ஜுனன் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவராம்.

கஞ்சாபேர்வழி: நேற்று முன்தினம், வேலையில்லை என்பதால் பட்டாபிராம் பகுதிக்கு அந்தப்பெண் சென்றுள்ளார்.. அப்போது அங்கே அர்ஜூனனை பார்த்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு, புது துணி எடுத்து தருவதாக சொல்லி அர்ஜூனன் அந்த பெண்ணை அழைத்திருக்கிறார்.. ஆனால், இந்த பெண், அவருடன் செல்ல மறுக்கவும், சமாதானம் செய்து அர்ஜூனன் தன்னுடன் திருவள்ளூருக்கு அழைத்து வந்துள்ளார்.

திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில் இரவு 8 மணியளவில், 6வது நடைமேடை அருகில் பெண்ணை அழைத்துச்சென்ற அர்ஜூனன், கஞ்சா போதையில், "நான் கூப்பிட்டால் வரமாட்டியா?" என்று கேட்டபடியே கையில் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை முகம், தலை, மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.. இதனையடுத்து 9 மணியளவில் அந்த பெண் உடலில் ஆடை எதுவும் இல்லாமல் வெட்டுக் காயங்களுடன் ரயில் நிலையம் நோக்கி ஓடி வந்துள்ளார்..

எஸ்கேப்: அதற்கு பிறகுதான், ரயில்வே போலீசார், பெண்ணுக்கு ஆடையை அணிவித்து 108 ஆம்புலன்ஸில் திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் குறித்து சித்தாள் தந்த வாக்குமூலத்தில், "அர்ஜூனன், எனக்கு துணி எடுத்துத் தருவதாக சொல்லி அழைத்து வந்தார். கஞ்சா போதையில் என்னிடம் தப்பா நடக்க பார்த்தார்.. அதனை நான் தடுத்தபோது என்னை கத்தியால் பல இடங்களில் வெட்டிவிட்டார்" என்றார்.. இப்போது கஞ்சா அர்ஜூனனை காணவில்லை.. போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+