ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக களமிறங்குவது மதுசூதனனா? பாலகங்காவா? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று கூடவுள்ள அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் முடிவு எடுக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட இருந்தனர். அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.
ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தற்போது ஒருங்கிணைந்த அதிமுகவின் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேமுதிக, பாமக போட்டியில்லை
இதையடுத்து திமுக சார்பில் கடந்த முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மருதுகணேஷே இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிக, பாமக ஆகியன கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டன. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.

சலசலப்பு
அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்சி மன்றக் குழு கூடியது. இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் வேட்பாளர் தேர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு தாக்கல்
இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன், ஈபிஎஸ் ஆதரவாளர் பாலகங்கா உள்பட 8 பேர் நேற்று விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடுகிறது.

வேட்பாளர் யார்?
இதில் வேட்பாளராக ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரா அல்லது ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளரா என்பது இன்று தெரிந்து விடும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications