வெள்ளத்தில் மிதந்து மறு பிறவி எடுத்த சென்னை குடிசைவாசிகளின் ஓட்டுக்களை அள்ளப் போவது யார்?
சென்னை: சென்னயைில் நகர்ப்புற வாக்காளர்களே அதிகம் என்றாலும் கூட குடிசைவாசிகளின் வாக்குகளும் கணிசமாக உள்ளது. இந்த வாக்கு வங்கியை மொத்தமாக அள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டா போட்டி போடுவதை ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கலாம்.
கிட்டத்தட்ட சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான குடிசைவாசிகள் உள்ளனர். எனவே இவர்களின் வாக்குகளும் முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளது.
மிக வலிமையான வாக்கு வங்கியாக கருதப்படும் சென்னை குடிசைவாசிகள் குறித்த ஒரு பார்வை இது...

சாலைகளில் வசிக்கும் மக்கள்
சென்னை மாநகர குடிசைவாசிகளில் பலர் சாலையோரங்களில், பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்கள் ஆவர்.

ரேஷன் கார்டு உண்டு
இப்படி நிரந்தரமான வீடுகள் இல்லாமல் பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்களில் 63 சதவீதம் பேரிடம் ரேஷன் கார்டுகள் உள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை
அதேபோல 68 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர். மேலும் தவறாமல் வாக்களித்தும் வருகின்றனர்.

படிக்காதவர்கள் அதிகம்
இந்த மக்களில் 53 சதவீதம் பேர் பள்ளிக்கூடத்தின் பக்கம் கூட ஒதுங்காதவர்கள். 30சதவீதம் பேர் குறித்த விவரம் இல்லை.

பிளஸ்டூ 11சதவீதம்
பிளஸ்டூ வரை படித்தவர்கள் எண்ணிக்கை 11 சதவீதமாகும். 6 சதவீதம் பேர் 5ம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆவர்.

பட்டதாரிகள் 0.2 சதவீதம்
பட்டதாரிகளும் இவர்களிடையே உண்டு. அதாவது 0.2 சதவீதம் பேர் உள்ளனர். 0.1 சதவதீம் பேர் டிப்ளமோ முடித்தவர்கள்.

தினசரி 300 ரூபாய் சம்பாதிப்பவர்கள் 83 சதவீதம்
இந்த மக்களில் 83 சதவீதம் பேர் தினசரி குறைந்தது ரூ. 300 சம்பாதிப்பவர்களாக உள்ளனர்.

ஒதுங்கும் இடமே வீடு
சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கட்டுமானத் தலங்கள், தொழிற்சாலைகள் என பல்வேறு முக்கிய இடங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பரிதாபகரமான வாக்காளர்கள்
இவர்கள் வசிக்கும் இடம் நிரந்தரம் இல்லை. எந்த அடிப்படைவசதியும் கிடையாது. சாலையோரம் வசிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. இங்கேயே வாழ்ந்து தலைமுறைகளைக் கண்டவர்களும் உண்டு.

வெள்ளத்தில் சிக்கிய குடிசைவாசிகள்
இதுதவிர சென்னையில் ஆற்றங்கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் மிகப் பெரிய அளவில் உள்ளனர். அனைவரும் கடந்த ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள். இவர்களின் வாக்குகளும் யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

படிக்காத சென்னை.. யாருக்கு?
மொத்தத்தில் படித்த சென்னை யாருக்கு வாக்களிக்கப் போகிறது என்பதை விட படிக்காத சென்னையின் ஏகோபித்த ஆதரவை யார் அள்ளப் போகிறார்கள் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications