ஆர்.கே.நகரில் வெல்லப் போவது யார்.. ஒன்இந்தியா வாசகர்களின் பரபர தீர்ப்பு!
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யார் வென்றால் என்ன என்பதுதான் மக்களின் வெறுப்பு மனப்பான்மை. ஆனால் பல ஆச்சரியங்களை இந்தத் தேர்தல் அளிக்கும் போலத் தெரிகிறது.
பல்வேறு கருத்துக் கணிப்புகளில் விதம் விதமான முடிவுகள் கூறப்பட்டு வியப்பை அளித்து வருகிறார்கள். சரி நமது வாசகர்களிடம் நாம் கேட்போம், என்ன சொல்கிறார்கள் என்று முடிவு செய்து இந்தத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்று கட்சி பெயரைச் சொல்லாமல் தேர்தல் சின்னத்தைப் போட்டு கேள்வி கேட்டிருந்தோம்.
அதில் கிடைத்த முடிவுகள் சுவாரஸ்யமானவை. இந்த கேள்விக்கு இதுவரை மொத்தம் பதிவான வாக்குகள் 30 ஆயிரத்து 226 ஆகும். அதில் பெரும்பாலானவர்களின் வாக்கு யாருக்கு கிடைத்தது, மோசமான வாக்குகளைப் பெற்றது யார் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள்
பாஜகவின் தாமரை சின்னத்துக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 2.2 சதவீதமாகும். மொத்த வாக்குகளில் 682 வாக்குகளே தாமரைக்குக் கிடைத்துள்ளது. பரிதாபமான நிலைதான். 5வது இடமே கிடைத்துள்ளது.

அதிமுகவுக்குக் கிடைத்த வாக்குகள்
இரட்டை இலை சின்னத்துக்குக் கிடைத்த வாக்குகள் 12.33 சதவீதமாகும். அதாவது 3727 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது நாம் தமிழரை விட இது குறைவாகும். 4வது இடத்தைப் பிடித்துள்ளது அதிமுக.

நாம் தமிழருக்குக் கிடைத்த வாக்குகள்
இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்துக்கு அதாவது நாம் தமிழர் கட்சியின் சின்னத்துக்குக் கிடைத்த வாக்குகள் 15.45 சதவீதமாகும். அதாவது பதிவான வாக்குகளில் 4671 வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்தது. இக்கட்சி 3வது இடத்தைப் பிடிக்கிறது.

தினகரனுக்குக் கிடைத்த வாக்குகள்
குக்கர் சின்னத்துக்கு அதாவது தினகரனின் கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 18 சதவீதமாகும். மொத்த வாக்குகளில் இவருக்குக் கிடைத்த வாக்குகள் 5442 ஆகும். இவருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது

திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள்
திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு கிடைத்த வாக்குகள் 45.87 சதவீதமாகும்.அதாவது 13,865 வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. இதுதான் பதிவான வாக்குகளியே அதிகம். அதாவது திமுக முதலிடத்தைப் பிடிக்கிறது.

மற்றவர்கள் வெல்ல ஆதரவு
இவர்களைத் தவிர வேறு யாராவது வெல்வார்கள் என்று கூறியோரின் வாக்குகள் 6.08 சதவீதமாகும். அதாவது 1839 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பாஜகவுக்குக் கிடைத்ததை விட கூடுதலாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications