பேராசியர் தீரனை அதிமுக தூக்கியடிக்க காரணமான ஸ்லீப்பர் செல் பேச்சு இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுகவில் இருந்து பேராசியர் தீரன் நீக்கப்படுவதற்கு இதான் காரணம்!- வீடியோ

  சென்னை: அதிமுகவில் தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வந்த பேராசிரியர் தீரன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். டிவி விவாதத்தில் தினகரனிடம் அதிமுகவை ஒப்படைக்க வேண்டும் என பேசியதாலேயே தீரன் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. தினகரன் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார். அதேநேரத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் தம்முடைய ஸ்லீப்பர் செல்கள் நிறைய பேர் இருப்பதாகவும் தொடர்ந்து தினகரன் கூறி வருகிறார்.

  டிவியில் பேச தடை

  டிவியில் பேச தடை

  இதனைத் தொடர்ந்து அதிமுகவில் தினகரனுக்கு ஆதரவான லேசான குரல் வந்தாலும் அவரை ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிற போக்கு நீடித்து வந்தது. இதனால் டிவி விவாதங்களில் பேசுவதற்கு யாரையும் அனுமதிக்காமலும் வைத்திருந்தனர்.

  தினகரன் ஆதரவு

  தினகரன் ஆதரவு

  பின்னர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோரை டிவி விவாதங்களில் பேச அதிமுக அனுமதித்தது. ஆனால் தீரனோ தொடர்ந்து தினகரனை விட்டுக் கொடுக்காமலேயே டிவி விவாதங்களில் பேசிவந்தார்.

  ஈபிஎஸ் ஆட்சி

  ஈபிஎஸ் ஆட்சி

  சில நாட்களுக்கு முன்னர் டிவி விவாதம் ஒன்றில், அதிமுகவை தினகரனும் ஆட்சியை ஈபிஎஸ்ஸும் நடத்தலாம் என பகிரங்கமாக பேச பெரும் அக்கட்சி வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்தன. அப்போதே தீரனை அழைத்து மேற்கு மாவட்ட அமைச்சர்கள் வறுத்தெடுத்தனர்.

  அதிருப்தியாளர்களுக்கு வார்னிங்

  அதிருப்தியாளர்களுக்கு வார்னிங்

  அதே நேரத்தில் மதுசூதனன் கடிதம் எழுதி சலசலப்பை கிளப்பினார். குடிநீர் வடிகால் வாரியம் கோரி கேபி முனுசாமி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அதிருப்தியாளர்களை எச்சரிக்கும் வகையில் தீரன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  AIADMK expelled its spokesman and former MLA Dheeran.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற