ஆர்.கே.நகரில் மாறி மாறி... சரத்குமார் சொல்லும் காரணத்தை கேளுங்க!
ஒரே தொகுதியில் தொப்பிக்கும் இரட்டை இலைக்கும் மாறி மாறி பிரசாரம் செய்ய மனசாட்சி இடம் தரவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் சமக யாருக்கும் ஆதரவு தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போல சூழ்நிலைக்கு ஏற்றபடி, என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். ஒரே தொகுதியில் தொப்பிக்கும் இரட்டை இலைக்கும் மாறி மாறி பிரசாரம் செய்ய மனசாட்சி இடம் தரவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தராது என்று அறிவித்திருக்கிறார் சரத்குமார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 23ஆம் தேதியன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அந்தோணி சேவியர் வேட்பாளராகக் களமிறங்கினார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமாரும் உடனிருந்தார்.

தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு
போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சமக வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. அதோடு, சமக மாற்று வேட்பாளரின் வேட்புமனுவையும் நிராகரித்தது. இதன் பின்பு, அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரனுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார் சரத்குமார்.

சமக போட்டியில்லை
பணப்பட்டுவாடா புகாரினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்திருக்கிறார் சரத்குமார். அதோடு, ஆர்.கே.நகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மனசாட்சி இடம் தரவில்லை
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், எடப்பாடி, ஓபிஎஸ் போல சூழ்நிலைக்கு ஏற்றபடி, என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஒரே தொகுதியில் தொப்பிக்கும் இரட்டை இலைக்கும் மாறி மாறி பிரசாரம் செய்ய மனசாட்சி இடம் தரவில்லை என்று காரணம் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சமக ஆதரவு கிடையாது என்றும் அறிவித்தார்.

இரட்டை இலைக்கு தோல்வி
உள்ளாட்சித் தேர்தல், 2019 லோக்சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, கட்சியைத் தயார்படுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார் சரத்குமார். இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார். ஜெயலலிதா அழைப்பின் பேரில் மீண்டும் கூட்டணியில் இணைந்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வியை தழுவினார் சரத்குமார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications