ஸ்டாலினுக்கு எதிராக அணிசேர்க்கும் கனிமொழி... அழகிரியை கோபாலபுரம் வரவழைத்த ராஜாத்தி அம்மாள்

திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் கேட்டுக் கொண்டதாலேயே முக அழகிரி தந்தை கருணாநிதியை சந்தித்ததாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க. அழகிரி திடீரென சந்தித்ததற்கு காரணமே கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்தான் என்கின்றன திமுக வட்டாரங்கள்.

திமுகவில் தாம் இருக்கும் வரை தாமே தலைவர் என்பது கருணாநிதியின் ஆணித்தரமான நிலைப்பாடு. ஆனால் அவரது இளையமகன் ஸ்டாலினோ, கருணாநிதிக்கு அடுத்து தாமே திமுகவின் தலைவர் என 'நமக்கு நாமே' பாணியில் மகுடம் சூட்டி வருகிறார்.

ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்கவே முடியாது என அவரது அண்ணன் மு.க. அழகிரி ஏற்கனவே போர்க்கொடி தூக்கினார். இதனாலேயே திமுகவில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

கனிமொழி

கனிமொழி

தற்போது ஸ்டாலினுக்கு போட்டியாக திமுகவில் இருப்பது கனிமொழிதான். அவருக்கு கருணாநிதி மட்டுமல்ல மு.க. அழகிரியும் ஆதரவாக இருக்கிறார். அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதும் கூட அவரை சந்தித்து பேசியவர் கனிமொழி.

களமிறங்க ரெடி

களமிறங்க ரெடி

திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறித்தாக வேண்டும் என்று தொடர்ந்து கங்கணம் கட்டிக் கொண்டு காய்களை நகர்த்தும் ஸ்டாலினுக்கு செக் வைத்து கொண்டிருப்பவர் கனிமொழிதான்... இருவருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வரும் நிலையில்தான் அண்ணன் அழகிரி பாணியில் ஸ்டாலினை வெளிப்படையாக எதிர்க்காலமா? என்ற தீவிர ஆலோசனையில் கனிமொழி இருந்து வருகிறார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

அழகிரி திடீர் சந்திப்பு

அழகிரி திடீர் சந்திப்பு

இந்த நிலையில் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை திமுக தலைமை கழகம் வெளிப்படையாக அறிவித்தது.

ராஜாத்தி அம்மாள்

ராஜாத்தி அம்மாள்

இதனை பயன்படுத்திக் கொள்ள வியூகம் வகுத்தது கனிமொழி தரப்பு. இதனால் உடனே அழகிரியை அழைத்த ராஜாத்தி அம்மாள், இந்த சூழலிலும் கூட அப்பாவை பார்க்க வரலைன்னா சரியாக இருக்காது என கூற அதிரடியாக அழகிரியும் கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்து 30 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

அடுத்த கட்ட வியூகம்

அடுத்த கட்ட வியூகம்

இதில் கனிமொழி தரப்பு உற்சாகமடைந்துள்ளதாம். ஸ்டாலினை எதிர்த்து வெளிப்படையாக களமிறங்க நினைக்கும் தமக்கு பாதுகாப்பாக அழகிரி இருப்பாரா? என யோசித்துக் கொண்டிருந்தது கனிமொழி தரப்பு. தற்போது அழகிரியின் கோபாலபுரம் வருகையால் அடுத்த கட்ட வியூகங்களுக்கு உற்சாகமாக தயாராகி வருகிறதாம் கனிமொழி தரப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+