பேசுனது நீங்க இல்லையா?.. அப்ப வாய்ஸ் டெஸ்ட்டுக்கு ரெடியா ராஜா!
Recommended Video

சென்னை: புதுக்கோட்டையில் போலீஸ் மற்றும் ஹைகோர்ட்டுக்கு எதிராக அவதூறு பேசுவது போல் வந்த வீடியோவில் தன்னுடைய குரலே இல்லை எனக் கூறும் எச் ராஜா, எதற்காக வாய்ஸ் டெஸ்ட் (குரல் மாதிரி சோதனை) எடுத்து பார்த்து தன்னை நிரூபித்துக் கொள்ளக் கூடாது?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்றைய தினம் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மசூதி வழியாக கொண்டு செல்ல எச் ராஜா உள்ளிட்டோர் தயாராகினர். ஆனால் அங்கு வந்த போலீஸார் இதை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இதுபோல் மற்ற மதத்தினரின் வழிப்பாட்டு தலங்கள் வழியாக செல்லக் கூடாது என்பது கோர்ட் உத்தரவு என எச் ராஜாவிடம் கூறினர்.

அவதூறு
கோர்ட் உத்தரவை மதிக்க தெரியாத எச் ராஜாவோ போலீஸ்காரர்களை கண்டபடி பேசிவிட்டார். வெட்கமாக இல்லையா, லஞ்சம் தரவா என தரம்தாழ்ந்த கேள்விகளை கேட்டார். அத்தோடு கோர்ட் உத்தரவு என போலீஸார் கூறியதற்கு நீதிமன்றத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. மிகவும் அவதூறான கெட்ட வார்த்தை ஹைகோர்ட்டாவது ----------- என தெரிவித்தார்.
குரலே என்னுடையது அல்ல
இதுபோல் பேசும் வீடியோ வைரலானது. எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கம்போல் என் அட்மின்தான் அதுபோல் பேசினார், நான் அவன் இல்லை என்ற பாணியில் பேசுவார் என்று பார்த்தால் அந்த வீடியோவில் உள்ள குரலே என்னுடையது அல்ல என்று அடித்து கூறி விட்டார்.

அந்தர் பல்டி
நான் பேசிய பேச்சுகளை யாரோ போலீஸ் மற்றும் நீதிமன்றத்துக்கு எதிராக பேசுவதை போல் எடிட் செய்து விட்டனர் என்றும் வாய் கூசாமல் கூறிவிட்டார். இது பல்டியிலும் பல்டி அந்தர் பல்டி கதையால்ல இருக்கு.

வாய்ஸ் டெஸ்ட்
சரி அந்த வீடியோவில் உள்ளது தன்னுடைய குரல் இல்லையெனில் குரல் மாதிரி சோதனை நடத்த நான் தயார் என எச் ராஜா சவால் விட்டு கூறியிருக்க வேண்டியதுதானே. கோபத்தில் வார்த்தைகளை கொட்டி விட்டு அதுவும் பொது இடம் என்றும் பாராமல் சிறிது அச்சமின்றி இவ்வாறு பேசிவிட்டு பின்னர் அது என் குரல் இல்லை என்றால் எப்படி ராஜா சார்.












Click it and Unblock the Notifications