ஸ்டாலினுக்கு நெருக்கடி? கர்நாடக தேர்தல் வெற்றி! தமிழ்நாட்டில் காங்கிரஸ் மெகா பிளான்! திரும்பிய திமுக
சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவிற்கு கூட்டணி ரீதியாக சில நெருக்கடிகளை கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் இந்த படுதோல்வி அதிமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் படுதோல்வி தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது.
பாஜகவை பாஜகவின் கோட்டையிலேயே வீழ்த்த முடியும். முறையாக திட்டமிட்டு பாஜகவை வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் நிரூபித்து உள்ளது. இனியும் அமித் ஷாவின் வியூகத்திற்கு பாஜக வீழ்ச்சி அடையாது. அவ்வளவு எளிதாக காங்கிரஸ் இனி தோல்வியை தழுவாது என்பதை நிரூபித்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அங்கே காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆலோசகராக நியமித்து இருந்த சுனில் கணகோலுதான். சுனில் வருகைக்கு பின் திட்டமிடல் ரீதியாக காங்கிரஸ் வலிமையாகி உள்ளது. அரசியல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு பணியாற்றி வந்தவர்.. காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற சென்று அங்கு முழு நேர உறுப்பினர் ஆகிவிட்டார்.
காங்கிரஸின் 2024 தேர்தல் பணிக்குழுவின் முக்கிய மாஸ்டார்மைன்ட் இவர்தான். தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று 2024 வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறார். 2016ல் திமுகவிற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கும் வேலை பார்த்தார். இரண்டிலும் கட்சிகள் தோல்வி அடைந்தாலும் நல்ல இடங்களை பெற்று எதிர்கட்சியானது.
ஒரு காலத்தில் ஸ்டாலினின் வீட்டிற்கு அப்பாயின்மென்ட் வாங்காமல் செல்லும் அளவிற்கு நெருக்கமாக இருந்தவர் மனக்கசப்பில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக நெருக்கடி:இந்த நிலையில் அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் சுனில்.. தமிழ்நாட்டில் திமுகவிடம் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களை கேட்க வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. கர்நாடக தேர்தல் வெற்றியை காரணம் காட்டி.. பாருங்கள் நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று கூறி திமுகவிடம் லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்க வாய்ப்புள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் 10 இடங்களை வாங்கிய காங்கிரஸ் இந்த முறை 20 இடங்கள் வரை கேட்கும். காங்கிரசை இழுக்க ஒரு பக்கம் எடப்பாடியும் முயன்று வருகிறார். இதை காரணமாக காட்டி, ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து காங்கிரஸ் கூடுதல் இடங்களை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு மாநிலங்களில் எங்கெல்லாம் காங்கிரஸ் கூட்டணியை நம்பி இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படி கர்நாடக தேர்தலை வைத்து கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.
காங்கிரசின் இந்த திடீர் எழுச்சி திமுகவிற்கு பாஜக வீழ்ச்சி என்ற வகையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட்டணி இடங்கள் ரீதியாக அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காது என்பதே நிதர்சனம்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications