நள்ளிரவில் டிரைவர் ராஜாவுடன் போயஸ் இல்லம் வந்த தீபா! மாதவன் எங்கே?
Recommended Video

சென்னை: போயஸ் இல்லத்தில் ஐடி ரெய்டு நடைபெற்றபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு வந்து தன்னை உள்ளேவிடுமாறு தகராறு செய்தார்.
இரவு 10 மணியளவில் போயஸ் இல்லத்தில் ரெய்டு ஆரம்பித்த நிலையில், தீபா சுமார் 12 மணிக்கு மேல் அங்கு வந்தார். போயஸ் இல்லத்தின் வாரிசு தான்தான் என்றும், தனக்கு நோட்டீஸ் தராமல் எப்படி வீட்டுக்குள் போகலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தன்னை உள்ளேவிடும்படி போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிகாலை 2 மணிவரை சோதனை நடைபெற்ற நிலையில், தீபாவை உள்ளேவிடவில்லை.

வாக்குவாதம்
இது ஒருபக்கம் இருக்க தீபாவுடன் வந்திருந்த அவரின் டிரைவர் ராஜா, மீடியாக்கள் கவனத்தை ஈர்த்தார். தீபா போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தியபோது அவரும் உடன்தான் நின்றிருந்தார்.

சும்மா நின்றார்
தீபாவுக்கு ஆதரவாக அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் அங்கேயே ஒரு மெய்க்காப்பாளரை போல நின்றிருந்தார். ரெய்டு முடிந்த பிறகு தீபா கிளம்பியதும், ராஜாவும் அவருடன் கிளம்பி சென்றார்.

மாதவன் வரவில்லை
அதேநேரம், தீபா கணவர் மாதவன், சம்பவ இடத்திற்கு வரவேயில்லை. மாதவன் இப்போது எங்கே என்ற கேள்வி மீடியா பிரதிநிதிகள் மத்தியில் எழுந்தது. ஏற்கனவே தீபாவுக்கும், மாதவனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று மாதவன் மிஸ்சாகியிருந்தது பலரது புருவங்களை உயர்த்தியது.

கருத்து வேறுபாடு
மாதவனுக்கும், ராஜாவுக்கும் நடுவே கருத்துவேறுபாடு உள்ளது. ஒருமுறை மீடியாக்கள் முன்னிலையில் இது வெடித்தது. இப்படியிருக்கும்போது, நள்ளிரவில் தனது மனைவி தீபாவை போயஸ் இல்லத்தில் ஒரு பரபரப்பான சூழல் நிலவும் பகுதிக்கு அனுப்பிவிட்டு மாதவன் ஏன் துணைக்கு வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications