போயஸ் கார்டனுக்குள் வந்து சிக்கிய தீபா.. வரவழைக்க சசிகலா குரூப் போட்ட திட்டம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபக் அழைத்துதான் தீபா போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்ததாக கூறியுள்ளார் தீபா. இது சசிகலா குரூப் செய்த திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

போயஸ் கார்டன் இல்லம்தான் ஜெயலலிதாவின் இல்லமாகும். அவரது தாயார் சந்தியா வாங்கிய வீடு இது. இதில் ஜெயலலிதா வசித்து வந்தார். அவருடன் சசிகலா குடும்பமும் ஒட்டிக் கொண்டு வசித்து வந்தது.

ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் என்று பார்த்தால் தீபக், தீபா மட்டுமே. ஆனால் ஜெயலலிதா இறந்ததும் இந்த வீட்டை இவர்களிடம் ஒப்படைக்காமல் சசிகலா, தினகரன் குடும்பம்தான் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது.

திட்டம் போட்ட தினகரன் குரூப்

திட்டம் போட்ட தினகரன் குரூப்

இந்த நிலையில் தீபக் இந்த வீட்டில் குடியேறியதாக கூறப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் இன்று திடீரென தீபா இந்த வீட்டுக்கு கிளம்பி வந்தார். தீபக் அழைத்துதான் அவர் வந்ததாக கூறப்படுகிறது.

தீபக் மூலமாக பிளான்

தீபக் மூலமாக பிளான்

ஏன் தீபக் கூப்பிட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் உள்ளே போய் விட்டுத் திரும்பிய தீபா, தனது தம்பி தன்னை அடித்தகா கூறியுள்ளார். திட்டமிட்டு கூப்பிட்டதாக கூறியுள்ளார்.

சசிகலா மீது பாய்ச்சல்

சசிகலா மீது பாய்ச்சல்

தீபக், சசிகலா ஆள் என்றும் காட்டமாக கூறினார். திட்டமிட்டு தன்னை அடித்ததாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபா - தீபக் விவகாரம் பெரும் மர்மமாக, குழப்பமாகவே உள்ளது.

எதற்காக இந்த டிராமா

எதற்காக இந்த டிராமா

எதற்காக இந்த டிராமா இன்று நடத்தப்பட்டது. என்ன காரணம் என்பது தெரியவில்லை. உண்மையில் போயஸ் கார்டனுக்குள் என்ன நடந்தது. உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa has rushed to Poes Garden house on the call from her brother Deepak.
Please Wait while comments are loading...