மயிலாடுதுறைக்கு மட்டும் இதுவரை வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்.. என்ன நடக்குது? இப்படி ஒரு காரணமா?
மயிலாடுதுறை: காங்கிரஸ் சார்பாக போட்டியிட உள்ள மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதை காங்கிரஸ் இன்னும் அறிவிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று முதல்நாள் காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டி. கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிப்பு. கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிப்பு. விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு.
கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இரவோடு இரவாக அறிவிப்பு: நேற்று முதல்நாள் இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக்டர் தாரகை வேட்பாளராக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை ஏன் தாமதம்: காங்கிரஸ் சார்பாக போட்டியிட உள்ள மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதை காங்கிரஸ் இன்னும் அறிவிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கே அறிவிக்கப்பட வேண்டிய வேட்பாளரை திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
திமுகவின் முழு விருப்பத்தோடு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் மயிலாடுதுறை வேட்பாளரின் பெயரை திமுக கடுமையாக எதிர்க்கிறதாம்.
இதோடு இல்லாமல் அந்த நபர் உள்ளூர் கிடையாது . அவர் வெளியூர் என்பதால் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகளும் அவரை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அவசரம்: இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் நெல்லை வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அவசரமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் ஓ பன்னீர்செல்வம் கூட தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி நேற்று முதல்நாள் வரை அறிவிக்காமல் இருந்தது. இது திமுக தரப்பிற்கு பிரஷரை அதிகரித்தது. காரணம் திமுக அமைச்சர்கள், முதல்வர் தொகுதி வாரியாக பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.,
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அப்படி இருக்க காங்கிரஸ் தொகுதிகளில் கூட கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
இது திமுகவிற்கு பிரஷரை அதிகப்படுத்தியது. அதோடு கூட்டணி வேகமாக அறிவித்தால்தான் பிரச்சாரம் செய்ய முடியும். பாஜக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. ஆனால் காங்கிரஸ் மட்டும் உட்கட்சி மோதல் காரணமாக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் திமுக தந்த பிரஷர், தொண்டர்கள் கேட்ட கேள்வி என்று பல காரணங்கள் காரணமாக நேற்று முதல்நாள் இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் நெல்லை வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அவசரமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications