கோபம் தணியல.. அந்த பெயரை கூட சொல்லாத எடப்பாடி.. அவ்வளவு ஆக்ரோஷமாமே.. பதுங்கும் பாஜக! அப்போ அண்ணாமலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் - பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது.

சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.

அதாவது அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக கருத்து சொன்னார்.

அவர் தனது பேட்டியில், ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.

இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று கூறினார்.

Why did Edappadi Palanisamy not talk about Annamalai in the party meeting and What happened?

எடப்பாடி பதிலடி:இதற்கு எடப்பாடி கொடுத்த பதிலடிதான் பாஜகவினரை விழி பிதுங்க வைத்தது. நேற்று முதல்நாள் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை பெயரை கேட்டதும் கோபம் அடைந்த எடப்பாடி தனது பேட்டியில், அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.

முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.

அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார்.

செயற்குழு:இந்த நிலையில்தான் நேற்று அதிமுக செயற்குழு நடந்தது. எடப்பாடி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் பாஜக உள்ளிட்ட எந்த கட்சி பற்றியும் விவாதிக்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறதாம். முக்கியமாக அண்ணாமலை பெயரை ஒருவர் கூட பேச்சுக்கு கூட இந்த கூட்டத்தில் பேசவில்லையாம்.

திமுகவை பற்றி கூட 2 முறை நீண்ட விவாதம் நடந்து இருக்கிறது. ஆனால் அண்ணாமலை பற்றி பேச்சு கூட எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Why did Edappadi Palanisamy not talk about Annamalai in the party meeting and What happened?

ஜெயக்குமார்:நேற்று கூட்டம் முடித்து வெளியே வந்த ஜெயக்குமார் அண்ணாமலையை கலாய்த்து பேசினார். அதில், அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி.

எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர். அண்ணாமலையை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.

Why did Edappadi Palanisamy not talk about Annamalai in the party meeting and What happened?

பாஜக கப்சிப்:அதிமுக தலைவர்களின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கட்சி தலைவரை விமர்சனம் செய்துவிட்டார் என்று கூறி பாஜகவின் டாப் தலைவர்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் தொடங்கி எல்லோரும் பதிலடி கொடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவிலோ அண்ணாமலைக்கு நெருக்கமாக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டியை தவிர யாருமே எடப்பாடிக்கு எதிராக பேசவில்லை. கிட்டத்தட்ட பாஜகவின் டாப் லீடர் எல்லோரும் பதுங்கிவிட்டனர்.

அமர் பிரசாத் ரெட்டி மட்டும், அடுத்தவர் காலில் விழுந்து பதவிபெற்று, பதவி பெற்றுக்கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர் எடப்பாடி பழனிசாமி. கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை உதாரணம், என்று பதிலடி கொடுத்துள்ளார் .

Why did Edappadi Palanisamy not talk about Annamalai in the party meeting and What happened?

மற்றபடி பாஜக தலைவர்கள் யாருமே அண்ணாமலை விவகாரத்தில் கருத்து சொல்லவில்லை. ஏற்கனவே அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில ஆவணங்களை வெளியிட்ட போதும் பாஜக டாப் தலைவர்கள் யாரும் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசவில்லை.

இப்போது இந்த விவகாரத்திலும் அண்ணாமலைக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காத காரணத்தால் அண்ணாமலை எங்கே பாஜகவில் சீனியர்கள் ஆதரவு இன்றி ஓரம் கட்டப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+