தன் கட்சி எம்.பியைத் தண்டித்து விட்டார் ஜெ... சிவாவுக்கு நியாயம் கிடைக்க திமுக என்ன செய்தது?
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. சிவாவை டெல்லி விமான நிலையத்தில் தாக்கியதால் அதிமுக மேலிடம் தம்முடைய கட்சி எம்பி சசிகலா புஷ்பாவை 'தண்டித்தே' விட்டது. ஆனால் அடிவாங்கிய திருச்சி சிவா தரப்போ திமுகவோ இதுவரை சசிகலா புஷ்பா மீது போலீசில் எந்த புகாருமே தெரிவிக்கவில்லை.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா. இதைத் தொடர்ந்து அதிமுக மேலிடம் விசாரணை நடத்தி சசிகலா புஷ்பாவுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தது. தனது கட்சிக்காரர் பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக அவரை அழைத்து விசாரித்து கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது.
பின்னர் தம்மை ராஜினாமா செய்ய சொல்லி முதல்வர் ஜெயலலிதா அடித்தார் என ராஜ்யசபாவில் புகார் கூறினார் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்தே டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அதிமுகவில் களேபரம்
இப்படி மாற்று கட்சியை சேர்ந்த எம்பியை அடித்தார் என்பதற்காக அதிமுகவில் பெரும் களேபரமே வெடித்திருக்கிறது. ஆனால் அடிவாங்கிய திருச்சி சிவாவோ, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிவிட்டு, அமைதியாக இருக்குமாறு கூறினார் என தெரிவித்திருந்தார்.

சசிகலா மன்னிப்பை ஏற்ற சிவா?
அதை விட முக்கியமாக சசிகலா புஷ்பா கேட்ட மன்னிப்பை திருச்சி சிவா ஏற்றுக் கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியுள்ளன. புஷ்பா நீக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் திருச்சி சிவாவிடமிருந்து எந்த சத்தத்தையும் காணோம்.

கனிமொழி பகிரங்க ஆதரவு
இதற்கும் மேலாக ராஜ்யசபாவில் இந்த பிரச்சனையை சசிகலா புஷ்பா பேசியபோது, திமுக எம்பி கனிமொழி பகிரங்கமாக அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.அடிவாங்கிய திருச்சி சிவாவின் கட்சியை சேர்ந்த எம்பி கனிமொழியே அடித்த சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது வினோதமாகத்தான் இருந்தது.

ஒரு புகாரும் தரலையே...
இத்தனைக்கும் மேலாக இதுவரை திமுக தரப்பு, தமது கட்சி எம்பியை அடித்த சசிகலா புஷ்பா மீது போலீசில் எந்த ஒரு புகாரும் கொடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

கனிமொழி "மேடம்"
அதை விட முக்கியமாக சசிகலா புஷ்பா திமுக தரப்புடன் நெருக்கம் காட்டுகிறார். கனிமொழி மேடம் என்றுதான் அவர் கூறுகிறார். சிவாவை அடித்ததும் கனிமொழியிடம் அவர் பேசியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications