ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் மதிக்கப்படாது- போட்டியிடாதது குறித்து கருணாநிதி விளக்கம்
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் மதிக்கப்படாது என்ற காரணத்தால் தி.மு.க. போட்டியிடாது என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவின் வெற்றிவேல் திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் உள்ள ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, ஜுன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் 26-5-2015 அன்று அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா என அனைவரும் கேட்டு வந்தார்கள் அல்லவா?
அதனால் தற்போது ஜெயலலிதாவுக்கான காரியங்களை நிறைவேற்றுவதற்காக நாடகம் ஒன்றை நடத்துவதைப் போல, ஆட்சி மிக வேகமாக இயங்குவதாகக் காட்டிக் கொள்ள முனைகிறார்கள். "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கிலே கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து, சிறையிலே அடைத்ததும், அவருடைய ஜாமீன் வழக்கு, மேல் முறையீடு வழக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் தொடர்ச்சியாக நடைபெற்று முடிந்து விட்டன.
எப்படியோ ஜெயலலிதா முதலமைச்சராகி விட்டாலும், சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை என்பதால், இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்லி, அந்த ராஜினாமாவின் தொடர்ச்சியாக இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.
27-9-2014 அன்று ஜெயலலிதா தண்டனைக்காளாகி, திருவரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் வந்த போது, தேர்தல் ஆணையம் 12-1-2015 அன்று தான் தேர்தல் அறிவிப்பினை செய்தது.
ஆனால் ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த 17ஆம் தேதி தான் வேட்பாளர் ராஜினாமா செய்கிறார். பத்தே நாட்களில் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.
நீதித் துறையிலும், தேர்தல் ஆணையத்திலும் மிகப் பெரிய செல்வாக்கினைப் பெற்றிருப்பவர்கள் நடத்தும் ஆட்சியில் இடைத் தேர்தல் நடைபெற்றால் அது எப்படி இருக்கும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
2014இல் இவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலையே நேரில் பார்த்தவர்கள் தானே நாம்!
திருவரங்கம் இடைத் தேர்தல் நேரத்தில் பணம் எப்படி யெல்லாம் திருவிளையாடல் செய்தது என்பது நமக்குத் தெரியாதா?
காவல் துறையினர் எந்த அளவுக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் அந்தத் தேர்தல்களில் நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்க்கவில்லையா?
எனவே இந்த இடைத் தேர்தலில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மதித்துப் போற்றப்படும் என்று நமக்குத் தெளிவாகத் தெரிகின்ற நிலையில், சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறவுள்ள சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விடுவதே நல்லது என்பதால், ஆர்.கே. நகர் தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications