தேர்தல் செலவுக்கான கட்சி பணம் 'ஸ்வாகா'.... மா.செ.க்களை திமுக தூக்கி அடித்தன் பின்னணி
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் 3 மாவட்ட செயலர்களான வீர.கோபால், காந்தி செல்வன் மற்றும் துரைராஜ் ஆகியோர் அதிரடியாக நேற்று அப்பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். இவர்கள் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமை கொடுத்த பணத்தை அப்படியே கபளீகரம் செய்து கொண்டனர்; வேட்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றனர் என்ற புகார்களால்தான் மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தெரிவித்த புகார்கள் மீது திமுக மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் முதல் கட்டமாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் காந்தி செல்வன், கோவை வடக்கு மாவட்ட செயலர் வீரகோபால், நெல்லை மேற்கு மாவட்ட செயலர் துரைராஜ் ஆகியோர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வீரகோபால்
கோவை வடக்கு மாவட்ட வீர்கோபால் தேர்தலில் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்று வேட்பாளர் மீனா லோகு கருணாநிதியிடம் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். தம்மிடம் ரூ10 லட்சம் ரூபாய் பணத்தை அடம்பிடித்து கேட்டு வாங்கியும் வீரகோபால் தேர்தல் பணி செய்யவில்லை எனவும் மீனா லோகு குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் மீனா லோகு, பொங்கலூர் பழனிச்சாயின் ஆதரவாளர் என்ற காரணத்தாலும் கோஷ்டி பூசலால் வீரகோபால் வேலை செய்யவில்லை என்கின்றனர் திமுகவினர். இதனால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டதாம்.
காந்தி செல்வன்
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலரான காந்தி செல்வனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அதிருப்தியில் இருந்தார். அவரிடம் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுக்கு என கட்சித் தலைமை கொடுத்த பணம் அப்படியே அவருடைய கல்லாவிலேயே தங்கிவிட்டதாம். குறிப்பாக ராசிபுரத்தில் எளிதாக திமுக வென்றுவிடும் நிலை இருந்தும் எங்கே வி.பி. துரைசாமி வெற்றி பெற்று நமக்கு போட்டியாக மாவட்டத்தில் உருவாகிடுவாரோ என கருதி காந்திசெல்வன் பிரசாரத்துக்கும் செல்லவில்லையாம்.
துரைராஜ்
இதேபுகார்தான் நெல்லை மேற்கு மாவட்ட செயலர் துரைராஜ் மீதும் வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டதாம். அத்துடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியனுடன் நெருக்கத்தை தொடர்ந்தும் காட்டி வந்ததால் கட்சி மேலிடம் பதவியை பறித்துவிட்டது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications