ரஜினி ஒரு 'காமன் மேன்'... அதனால்தான் அரசியலுக்கு வரக் கூடாது என்கிறேன்...ஈ.வி.கே.எஸ்!
சென்னை: ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவானவர். அத்தகையவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது என்பதற்காகவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று தான் கூறியதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

பாஜக
ரஜினி எங்கே பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்று நினைத்து நான் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறவில்லை.

ரஜினி
தந்தை பெரியார், காமராஜர் உள்ளிட்டவர்களை அரசியலையும் தாண்டி மக்கள் கொண்டாடுகிறார்கள். அதே போன்று ரஜினியும் அனைவருக்கும் பொதுவானவர்.

அரசியல்
ரஜினி ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனர். பொதுவான மனிதரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது. அதனால் தான் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்றேன்.

சந்திப்பு
நான் விரைவில் ரஜினிகாந்தை சந்தித்து பேசவிருக்கிறேன் என்றார் இளங்கோவன். இளங்கோவன் இவ்வாறு கூற காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜி.கே. வாசனோ தனது புதிய கட்சிக்கு ரஜினியின் ஆதரவை பெறத் துடிக்கிறார்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!












Click it and Unblock the Notifications