சிக்க போகுது.. "கிரைம் சீன்".. கள்ளக்குறிச்சியில் லேசர் 3டி ஸ்கேனரை களமிறக்கிய போலீஸ்.. காரணம் என்ன?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளியில் பாரோ நிறுவனத்தின் லேசர் ஸ்கேனர்களை புலனாய்வு குழு களமிறக்கி ஆய்வு செய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து டிஐஜி பிரவீன் குமார் தலைமையில் எஸ்ஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு மேலும் 2 நாட்களுக்கு அங்கு விசாரணை செய்ய உள்ளது.
நேற்று கள்ளக்குறிச்சி பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டிரோன்
அதேபோல் நேற்று அங்கு டிரோன் ஆய்வு செய்யப்பட்டது. கலவரம் எப்படி அரங்கேற்றப்பட்டது என்று கண்டிபிடிப்பதற்காக தற்போது டிரோன் மூலம் படம் எடுக்கப்பட்டது. அதேபோல் கலவரத்தில் சேதம் எவ்வளவு ஏற்பட்டது என்பதும் இந்த டிரோன் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்படும். 5 டிரோன் கேமராக்கள் நேற்று பயன்படுத்தப்பட்டது.

பாரோ நிறுவனம்
இந்த நிலையில் தற்போது அங்கு பாரோ நிறுவனத்தின் லேசர் ஸ்கேனர்களை புலனாய்வு குழு களமிறக்கி உள்ளது. இதை வைத்து போலீசார் அங்கு முக்கிய ஆய்வுகளை செய்து வருகிறார்கள். பல்வேறு லேசர் ஸ்கேனர்களை ஒவ்வொரு மாடியிலும் வைத்து 3டி முறையில் ஸ்கேன் செய்து வருகிறார்கள். இது அகச்சிவப்பு கதிர்களை வெளியிட்டு ஒரு பகுதியில் 3டி முறையில் ஸ்கேன் செய்யும் கருவியாகும். ஒரு பகுதியை மொத்தமாக ஸ்கேன் செய்துவிடும்.

கிரைம் சீன்
உலகம் முழுக்க பல நாடுகளில் போலீஸ் மூலம் பயன்படுத்தப்படும் நவீன லேசர் ஸ்கேனர் ஆகும் இது. பொதுவாக கிரைம் சீன்களில் ஸ்கேன் செய்ய இது உதவும். இந்த பாரோ ஸ்கேன் மூலம் ஒரு பகுதியில் பல போட்டோக்கள் எடுப்பதற்கு பதிலாக ஸ்கேன் எடுத்தால் போதும். கேமராவில் பதியாத விஷயங்கள் கூட இதில் பதிந்துவிடும். துல்லியமாக எச்டியில் இதில் பதிவாகும்.

கண்டுபிடிக்க முடியும்
இதனால் எளிதாக பிரச்சனைகளை கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக ஒரு கொலை நடக்கிறது என்றால் அங்கே போட்டோக்களை தடயவியல் துறை எடுக்கும். மாறாக இதை வைத்து ஸ்கேன் செய்தால் பல கோணத்தில் எல்லா பகுதிகளும் ஸ்கேன் செய்யப்படும். பல போட்டோக்கள் எடுப்பதற்கு பதிலாக நேரில் பார்ப்பது போன்ற துல்லியமான முடிவுகளை இந்த 3டி ஸ்கேன் கருவி வழங்கும். இதைத்தான் அந்த பள்ளியில் பயன்படுத்தி உள்ளனர்.

தீ ஆபத்து
அதேபோல் கிரைம் சீன் மட்டுமின்றி ஒரு இடத்தில் தீ பிடித்து உள்ளது என்றால், தீக்கான காரணத்தை கண்டுபிடிக்கவும் இது உதவும். அதாவது தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இந்த பள்ளியில் பல அறைகள் தீ வைக்கப்பட்டன. இதன் காரணமாக லேசர் ஸ்கேனர் மூலம் தீ எங்கே முதலில் வைக்கப்பட்டது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.
Recommended Video

இன்சூரன்ஸ்
இது போக இன்சூரன்ஸ் காரணங்களுக்கும் இதை பயன்படுத்தலாம். ஒரு இடத்தின் சேதம் எவ்வளவு என்பதை இதன் மூலம் துல்லியமாக மதிப்பிட முடியும். அந்த பள்ளிக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கருவியை பயன்படுத்தி அந்த விவரங்களை வெளியிட முடியும். அந்த பள்ளி இன்சூரன்ஸ் கிளைம் செய்யவும் இது உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications