அண்ணன் என்னடா தம்பி என்னடா 'தண்ணி இல்லாத' உலகத்திலே...!

Subscribe to Oneindia Tamil

தினம் தினம் விவசாயிகளின் சாவுகள் குறித்த செய்திகள். தற்கொலைகள் அல்லது பயிர்கள் கருகும் கோரம் தாளாமல் அதிர்ச்சி மரணங்கள்...

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதிலுமே இத்தகைய மரணங்கள் தொடர்கின்றன.

Why farmers commit suicide in Delta districts? Some facts

உண்மையில் என்ன நிலைமை...?

காவிரி வறண்டு போய்விட்டது. காவிரியின் கிளைக் கால்வாய்கள் எதிலும் தண்ணீர் இல்லை. பிற மாவட்டங்களில் ஏரி குளங்களில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலும், பொங்கலுக்குப் பிறகு வற்றிப் போய்விடக் கூடும்.

பொங்கல் நேரம் அறுவடைக் காலம். ஆகஸ்டில் தொடங்கும் சம்பா பருவத்தில் நடப்பட்ட நெல் இந்நேரம் அறுவடை முடிந்து விளைச்சல் வீடு வந்திருக்க வேண்டும். பல ஆயிரம் ஏக்கர்களில் சம்பா பயிரிடப்பட்டது. முன்கூட்டியே பயிர் வைத்த சிலர் தட்டுத் தடுமாறி அறுவடையை முடித்துவிட்டனர்.

ஆனால் பெரும்பாலான விவசாயிகள் காவிரியில் தண்ணீர் வருமா எனக் காத்திருந்து பின்னர்தார் பயிர் வைத்துள்ளனர். இவர்கள்தான் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். பயிர்களில் கதிர் முற்றும் தருணத்தில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் போய்விட்டது.

"இங்கு பெரும்பாலும் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் கிடையாது. வாய்க்காலில் வரும் ஆற்றுத் தண்ணீர்தான் எங்கள் பிரதான பாசனம். சிலர் டீசல் மோட்டார்கள் வைத்து வாய்க்கால்களில் உள்ள நீரைப் பாய்ச்சுகிறார்கள். வசதியுள்ள சிலர் மட்டுமே ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பாசனம் செய்கிறார்கள். என் சொந்த அண்ணனே பத்து ஏக்கர் நெல்லுக்கு ஆழ் துளைக் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறான். பக்கத்தில்தான் எனது 5 ஏக்கர் நெல் பயிர் கருகுகிறது... ஆனால் தண்ணீர் தர மறுக்கிறான்... என்ன செய்வது?" என்கிறார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி.

திருவாரூருக்கு அருகில் உள்ள ஒரு விவசாயி... இவரது பத்து ஏக்கர் நிலத்தில் சம்பா பருவ நெல் பயிரிட்டுள்ளார். கதிர் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் சுத்தமாக இல்லை. முழுக்க கால்வாய்ப் பாசனம். சில தினங்களுக்கு ட்ராக்டரில் தண்ணீர் வரவழைத்து கொஞ்சம் நிலத்துக்குப் பாய்ச்சிப் பார்த்தார். கட்டுப்படி ஆகவில்லை. அப்படியே விட்டுவிட்டார். இப்போது பயிர்கள் முழுக்கப் பதராகி காய்ந்து சாய்ந்து கிடக்கின்றன. "அறுத்து மாட்டுக்குதான் போட்டுக்கிட்டிருக்கோம். கிட்டத்தட்ட 4 லட்சம் வரை நஷ்டம். இந்தக் கடனை எப்படி அடைத்து மீளப் போறோம்னு தெரியல..." என்கிறார்.

இந்த மாதிரி விரக்திதான் பல விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளுகிறது... அல்லது அதிர்ச்சி கொலைகளுக்குக் காரணமாகிறது.

பொத்தாம் பொதுவாக விவசாயிகள் பிரச்சினை என்று பேசிக் கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான நிவாரணம் வழங்கி, அவர்களைக் காக்க வேண்டிய தருணம் இது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவருமே இதில் உளமார களமிறங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+