விசிக என்னும் பெரும் கனவு.. அவங்க வந்தா மட்டும் போதுமா.. எடப்பாடி திட்டத்தில் விழும் ஓட்டை.. சரியுதே
சென்னை: பாஜகவை பகைத்துக்கொண்டு விசிகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவில் சிலர் முயன்று வருகிறார்களாம். ஆனால் அதிமுகவில் இருக்கும் சிலரே கூட இதை கடுமையாக எதிர்த்து வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செய்து கொண்டு இருக்கிறாராம். அதில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க அவர் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறாராம்.

அதாவது ஜெயலலிதா முன்பு வைத்து இருந்த கூட்டணிகளை போல.. திமுகவின் நட்பான கட்சிகளை உடைத்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக இருக்கிறாராம். முக்கியமாக எப்படியாவது திருமாவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி முயன்று வருகிறாராம். இப்போதைக்கு அதிமுக - பாமக உறவு நன்றாக இல்லை.
பாஜகவுடனும் அதிமுக சுமுகமாக உறவில் இல்லை. இரண்டு தரப்பும் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் பேசிய அண்ணாமலை கூட, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன், என்று குறிப்பிட்டார்.

அப்படி இருக்க ஒருவேளை பாஜகவுடன் அதிமுகவின் உறவு முறிந்தால் விசிகவை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும். திருமாவை அதிமுக கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல தொடங்கி உள்ளாராம்.
முக்கியமாக அதிமுக மீது தற்போது கொங்கு கட்சி.. ஒரு ஜாதிக்கான கட்சி என்ற பிம்பம் உள்ளது. அதை உடைக்க வேண்டும். முக்கியமாக தலித் மற்றும் சிறுபாண்மையினர் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறாராம். அப்படி அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அதற்கு பாஜகவை விரட்டிவிட்டு விசிகவை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம்.
ஒருவேளை பாஜகவுடன் 2024ல் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் விசிகவை தட்டி தூக்க எடப்பாடி ஆயத்தம் ஆகி வருகிறாராம். எடப்பாடி மட்டுமின்றி பாஜகவை பகைத்துக்கொண்டு விசிகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவில் சிலர் முயன்று வருகிறார்களாம்.

ஆனால் அதிமுகவில் இருக்கும் சிலரே கூட இதை கடுமையாக எதிர்த்து வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கட்சிக்குள் இருக்கும் சிலரே இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம். விசிக வந்தால் மட்டும் நமது வாக்கு வங்கி மாறிவிடுமா? பாஜகவை உதறிவிட்டு விசிகவோடு போனால்... கொங்கு மண்டலத்திலேயே கூட நமக்கு வாக்கு வங்கி இருக்காது. பாஜக, பாமகவை உதறிவிட்டு விசிகவோடு போனால் மட்டும் தென் மண்டலத்தில் நாம் வெற்றிபெற்று விடுவோமா.
விசிக என்பதை பெரிய கனவு போல எடப்பாடி நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நமக்கு தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் வாக்குகளும்தான் கிடைக்கவில்லை. அதை பெறுவதற்கு முயல வேண்டும். மற்றபடி விசிக நமக்கு பெரிய அளவில் உதவாது என்று கட்சிக்கு உள்ளேயே சிலர் முணுமுணுக்க தொடங்கி உள்ளனராம்.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications