"சசி அத்தை... சசி அத்தை" என்று கூறிய தீபக் திடீரென "அம்மா" என கூறுவது ஏன்??
வாய்க்கு வாய் சசி அத்தை என்று கூறி வந்த மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், திடீரென சசிகலாவை தாய் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சசி அத்தை என்று வாய் நிறையக் கூறுகிறார் தீபக்... இது தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் பேட்டியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவை எப்படி அழைப்பார் என்று நெறியாளர் ரங்கநாத் பாண்டே கூறியது. ஆனால் இப்போது அதே தீபக் சசிகலாவை தாய் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இத்தனை நாட்களாக அத்தை என்று கூறி வந்தவர் திடீரென அம்மா என்று அழைக்க ஆரம்பித்திருப்பதன் பொருள் என்ன என்ற பெரும் விவாதம் வெடித்துக் கிளம்பியுள்ளது.

அதிமுகவின் அடுத்த வாரிசாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் தீபக்கின் சகோதரி தீபா தீவிரமாக உள்ள நிலையில் அதை முறியடிக்க சசிகலா தரப்பு தீபக்குக்கு இப்படி கூறுமாறு குறிப்பு ஏதேனும் கொடுத்துக் களம் இறக்கி விட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தீபக்கையும் தன்னுடேயே தனது கஸ்டடியில் வைத்திருந்தார் சசிகலா. இதுவும் கூட அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில், சசிகலா எனது அம்மா போன்றவர். அவர் எனது தாய். எனவே அவருடன் பேசிக் கொள்வீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தந்தி டிவிக்கு தீபா ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரை பேட்டி கண்ட ரங்கநாத் பாண்டே கூறுகையில் வாய்க்கு வாய் சசி அத்தை சசி அத்தை என்று கூறுகிறார் தீபக் என்று கூறியிருந்தார். ஆனால் தீபக்கோ சசிகலாவை தனது தாய் என்று கூறியுள்ளார். அத்தை எப்படி திடீரென அன்னை ஆனார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications