Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஜி, சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் கொடுக்காமல் ஜெ. கதவை சாத்திய காரணம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிட்டிங் எம்.எல்.ஏக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும், முன்னாள் அமைச்சர்கள் 10 பேருக்கும் இந்நாள் அமைச்சர்கள் பத்து பேருக்கும் சீட் கொடுக்கவில்லை ஜெயலலிதா.

சுழல் விளக்கு சுழல அமைச்சர்களாக வலம் வரும் அமைச்சர்கள் எஸ்.அப்துல் ரஹும், கே.ஏ.ஜெயபால், பி.மோகன், பி.பழனியப்பன், டி.பி.பூனாட்சி, என்.சுப்பிரமணியன், முக்கூர் என்.சுப்பிரமணியன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.சுந்தரராஜ், எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய 10 அமைச்சர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, புத்தி சந்திரன், டி.கே.எம்.சின்னையா, எஸ்.தாமோதரன், ஏ.முகமதுஜான், பரஞ்ஜோதி, பி.வி.ரமணா, ஜி.செந்தமிழன், சி.சண்முகவேலு உள்ளிட்ட பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர்களாக இருந்த போது ஆடிய ஆட்டத்தினால் பதவியை பறிகொடுத்த இந்த பத்து பேருக்கும் இப்போது எம்.எல்.ஏவாக போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரகீம்:

அப்துல் ரகீம்:

ஆவடி எம்.எல்.ஏ. அப்துல் ரகீம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கிறார். 2011 சட்டசபை தேர்தலில், 42 ஆயிரத்து, 173 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்த சில மாதங்களில் நடந்த, ஆவடி நகரசபை தலைவர் தேர்தலில், திமுகவைச் வை சேர்ந்த நாசர் வெற்றி பெற்றார். நாசர் வெற்றி பெறுவதற்காக, இவர் உள்ளடி வேலை செய்தார் என்பது புகார். இதனையடுத்து அப்துல் ரகீமிடம் இருந்த நகரச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்தாலும் திமுக ஆதரவாளராக செயல்பட்டார் என்பதும், பினாமிகள் பெயரில் ஏராளமான நிலங்களை வளைத்தார் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு. இதுவே இவருக்கு சீட் மறுக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

முக்கூர் சுப்பிரமணியன்:

முக்கூர் சுப்பிரமணியன்:

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருக்கும் முக்கூர் சுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வாங்கியதில், கமிஷன் அடித்தார் என்ற புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறது. கட்சி பிரமுகர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது, அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்தது என விசாரணையில் தெரியவந்தது. பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் ரகசிய தொடர்பில் இருந்ததுதான் ஜெயலலிதாவின் கோபத்திற்குக் காரணம் என்கின்றனர்.

மோகன்

மோகன்

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, ஊரக தொழில்துறை அமைச்சரானார், மோகன். அதிமுக அமைப்பு செயலராகவும் இருக்கும் இவர் மீது ஏராளமான புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறது. கூட்டுறவு தேர்தல் தொடங்கி ஆந்திராவில் தமிழர்கள் விடுதலையான சம்பவத்தை கட்சித் தலைமைக்கு சாதகமாக்காதது வரை இவர் மீதான புகார்கள் வரிசை கட்டுகின்றன. இரு பிரிவினரிடையேயான மோதலையும் தடுக்க தவறிவிட்டார் என்பதும் மோகன் மீதான புகார். இதுவே அவருக்கு சீட் கிடைக்காமல் தடுத்து விட்டது என்கின்றனர்.

பூனாட்சி

பூனாட்சி

முத்தரையர் கோட்டாவில், கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சரானார் பூனாட்சி. அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சகோதரரின் சொத்தை அபகரிக்க முயன்றார்; ஆட்சிக்கு எதிராக நடந்த முத்தரையர் போராட்டத்துக்கு பின்னணியாக இருந்தார் என்ற உளவுத்துறை அறிக்கை, அவருக்கு சீட் கிடைக்காமல் செய்துள்ளது.

சுப்பிரமணியன்

சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏவான ஆதிதிராவிடர் நல அமைச்சரானார் சுப்ரமணியன். தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லையாம். யாராவது கேட்டால், 'எனக்கா ஓட்டு போட்டீர்கள்; ஜெயலலிதாவுக்கு தானே; அங்க போய் கேளுங்கள்' என்று கூறியதே இவருக்கு ஆப்பாக அமைந்துள்ளது.

பழனியப்பன்

பழனியப்பன்

ஐவரணியில் இருந்த பழனியப்பன், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஜெயித்து, உயர் கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இதனால், தலைமை நிலையச் செயலாளர், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் என, அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள் கிடைத்தன. துணைவேந்தர் நியமனம் உட்பட துறை சார்ந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள், ஆதாரத்துடன் தலைமைக்கு புகார்களாக சென்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கான்ட்ராக்ட் பணிகளை, தன் குடும்பத்தார் மூலம் செய்தார். தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால், கட்சியினரிடையே வெறுப்பை சம்பாதித்தார். ஐவரணியில் இருந்த அமைச்சர்களில் நால்வர் தப்பிக்க இவர் பலியாகிவிட்டார்.

திருப்பூர் ஆனந்தன்

திருப்பூர் ஆனந்தன்

வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மீதும் பல்வேறு புகார்கள் காரணமாக மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ள ஆனந்தன், கடந்த 2013ம் ஆண்டு ஜூன் வரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 22ம் தேதி வரை வனத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்தார். அமைச்சரான பிறகு அவரை சுற்றிலும், எப்போதும் கூட்டம் அதிகரிக்க துவங்கியது.

இதேபோல், அமைச்சர் ஆனந்தனின் சகோதரி மகன் கோகுல் காதல் திருமண பிரச்னையில் தலையிட்டு, காதலர்களை பிரித்ததாக புகார் எழுந்தது. மேலும், பெண் வீட்டாரை ஆனந்தனின் ஆட்கள் மிரட்டியதாவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனந்தன் இந்துசமய அறநிலயத்துறை அமைச்சராக இருந்தபோது, அதிமுகவில் பதவியும், அறநிலையத் துறையில் இருந்து நிலமும் வாங்கித்தருவதாகக்கூறி, ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக திருப்பூர் காந்திநகரை சேர்ந்த ஜெயமணி என்பவர் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கடந்த மே மாதம் ஜெயலலிதா பதவியேற்ற போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. செந்தில் பாலாஜி பதவி பறிக்கப்பட்ட உடன் ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இம்முறை வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை.

ஜெயபால்:

ஜெயபால்:

நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயபாலுக்கு, மீன்வளத் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. ஓ.எஸ் மணியனுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரண்டு கோஷ்டிகள் உருவானது. ஓ.எஸ் மணியனிடம் இருந்த மாவட்ட செயலர் பதவியை பறிபோகவும், எம்.பி. தேர்தலிலும் மணியனுக்கு சீட் கிடைக்காமல் செய்யவும் காரணமாக இருந்தார் ஜெயபால். பதிலுக்கு, மணியன் ஆதரவாளர்கள், சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தியதே ஜெயபாலுக்கு சீட் கிடைக்காமல் போக காரணம் என்கின்றனர்.

சுந்தர்ராஜன்

சுந்தர்ராஜன்

2011ல் நடந்த தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனி தொகுதியில் வெற்றி பெற்று, விளையாட்டு துறை அமைச்சரானார் சுந்தர்ராஜன். புதுக்கோட்டை மாணவியர் விளையாட்டு விடுதியில், இரவு நேரத்தில் அவர் நடத்திய திடீர் ஆய்வும், மாணவியரை தொட்டு பேசிய விதமும் சர்ச்சையை கிளப்பியது. கட்சித் தலைமையின் கடும் கோபத்திற்கு ஆளானார் சுந்தரர்ராஜன். இதுவே இவருக்கு 'சீட்' மறுக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

சண்முகநாதன்

சண்முகநாதன்

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு, ஜவுளி மற்றும் சுற்றுலா துறை அமைச்சரானார், எஸ்.பி.சண்முகநாதன். இந்த மாவட்டத்தில், சண்முகநாதன் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் எதிர்கோஷ்டியும் செயல்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நடந்த, 'சீட்' பேர வசூல் ஆடியோ வெளியானது. அதில், அவரது உதவியாளர் கைது செய்யப்படவே அப்போதே, அவருக்கு சீட் இல்லை என்பது முடிவானது. இப்போது வேட்பாளர் பட்டியலில் எஸ்.பி.சண்முகநாதனின் பெயர் இடம்பெறவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+