Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா புஷ்பா எபெக்ட்... இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை ஜெ., கூண்டோடு மாற்றியதன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உள்ள நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றியதன் பின்னணியில் சசிகலாபுஷ்பா விவகாரம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் சத்தம் இல்லாமல் ஒட்டிகொண்டிருந்ததைப் பார்த்து மற்ற கட்சி நிர்வாகிகளுக்கு பொறாமை இருக்கத்தான் செய்தது. அப்படி அதிகம் களை எடுப்பு நடக்காத பதவியாக இருந்தது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பதவிகள். 2011 ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான் இந்த அமைப்பே உருவாக்கபட்டது.

2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக-வுக்கு புதுதெம்பும் புத்தெழுச்சியும் ஊட்டியவர்கள் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள். தமிழகம் முழுக்க குட்டி குட்டியாக கட்சி அமைப்போடு இணைந்து ஆனால், கட்சிக்கு அப்பாற்பட்ட பெண்களை உள்ளே இழுத்து வந்து கட்சியைத் தேர்தலுக்குத் தயாரித்ததில் இந்த பாசறைக்கு பெரும் பங்கு உண்டு.

இந்நிலையில் வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் இளைஞர் - இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை மாற்றி ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பின்னணியில் சசிகலா புஷ்பா விவகாரத்தைக் காரணமாக கூறுகின்றனர்.

இளம்பெண்கள் பாசறை

இளம்பெண்கள் பாசறை

ஜெயலலிதாவின் விருப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பிற்கு நிர்வாகிகள் நியமனத்தில், அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களின் வாரிசுகளை உள்ளே கொண்டுவந்தனர். இந்த அமைப்பிற்கு ஜெயலலிதாவிடம் முக்கியத்துவம் இருந்ததால், இதில் பதவி பெற அனைத்து மாவட்டங்களிலும், கடும் போட்டியே இருந்தது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இந்த அமைப்பில் இருந்த நிர்வாகிகள் நீண்டகாலமாக பதவியில் நீடித்து வந்தனர். தற்போது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட பொறுப்பில் இருந்த ஐந்து பேரை அதிரடியாக நீக்கியுள்ளார் ஜெயலலிதா. புதுக்கோட்டை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் உட்பட ஐந்து பேரை இரண்டு தினங்களுக்கு முன் நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

நிர்வாகிகள் மாற்றம்

நிர்வாகிகள் மாற்றம்

ஏற்கனவே இந்த அமைப்பின் சில மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருந்தனர். எனவே காலியாக இருந்த அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 13 பேரை புதிய மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளார் ஜெயலலிதா. இதில் ஒன்பது மாவட்டங்களின் செயலாளர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், சில மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடுகள் இல்லாமல் இருந்ததாலும் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் ஜெயலலிதா என்று கூறப்பட்டது. இதன் பின்னணியில் சசிகலா புஷ்பா விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது. திருச்சி சிவா விவகாரத்தில் சசிகலா புஷ்பா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து சவால் விட்டு பேசி வருகிறார்.

சசிகலா புஷ்பா எபெக்ட்

சசிகலா புஷ்பா எபெக்ட்

சசிகலா புஷ்பா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில நிர்வாகியாக இருந்தபோது, அவர் தனக்கு வேண்டிய சிலருக்கு இந்த அமைப்பில் மாவட்ட பொறுப்பை போட்டு கொடுத்தாக அ.தி.மு.க தலைமைக்கு புகார் சென்றுள்ளது. சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் யாரும் கட்சி பொறுப்பில் இருக்ககூடாது என்று நினைத்த ஜெயலலிதா, உடனடியாக கட்சியில் இருந்து நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+