களத்தூர் கண்ணம்மா டூ "பாரதி" கண்ணம்மாவா? என்னதான் சொல்ல வருகிறார் கமல்?
டுவிட்டரில் கமல்ஹாசன் தனது ப்ரொபைல் படத்தை பாரதியாக சித்தரித்து மாற்றியது ஏன்? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களில் இறங்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை: முண்டாசு கட்டிய பாரதி போல் தனது ப்ரொபைல் படத்தை சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் மாற்றியதை அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது குறித்து விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் ஏராளமான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இதனால் ஆட்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு உரிய பதில்களை கொடுத்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் குறித்து
கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வந்தது. இதை தடுக்க அரசு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஆனால் அதை குடித்தால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று யாரோ கிளப்பி விட, தனது ரசிகர்கள் நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கமல் கேட்டுக் கொண்டார். அரசை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து பதிந்த கமல் மீது வழக்கு தொடர வேண்டும் என்றனர். நிதீமன்றத்தின் உத்தரவுபடி கமல் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த வித முகாந்திரமும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஜெ.வீட்டில் ரெய்டு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெயலலிதா வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அப்போது குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்றும் ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் என்றும் கமல் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். கமல் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார், அரசு மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

பாரதியாக மாறிய கமல்
இந்நிலையில் சிகப்பு பேக்கிரவுண்டில் முண்டாசு கட்டி கொண்டு தன்னை பாரதியாக சித்தரித்து கமல் தனது டுவிட்டர் படத்தை மாற்றியுள்ளார். இது வெளியான சில நிமிடங்களில் வைரலாகியுள்ளது. தற்போது கமல் என்னதான் சொல்ல வருகிறார் என்று ஆளாளுக்கு விவாதம் செய்ய தொடங்கிவிட்டனர்.
|
நம்பிக்கைக்கான அச்சாரமா?
ஊழல், லஞ்சம், முறைகேடு உள்ளிட்டவை தமிழகத்தில் நடைபெறுகிறது என்று அடிக்கடி கூறும் கமல், வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை அடையாளம் காட்டுவதற்காக சிவப்பு நிறத்தை வைத்துள்ளார் என்றும், நம்பிக்கை, விசுவாசம், புத்திக் கூர்மை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடாக நீல நிறத்தை முகத்தில் பிரதிபலித்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் விளக்கம் கற்பித்துள்ளனர்.
|
சுட்டெரிக்கும் விழி
கவி யில் புரட்சியாளன் பாரதி - இப்
புவி யில் புதுமையாளன் பார்த்தசாரதிKH
நேர்மை - வெள்ளை
பகுத்தறிவு - கருப்பு
வீரமும் விவேகமும் - சிகப்பு
தவறுபவர்களை - சுட்டெரிக்கும் விழி
'தமிழன்'பெருமை - முறுக்கு மீசை
முட்டாசில் - பல ஆதாரங்கள்
கழுத்து கட்டில் - உண்மைகள்
|
கம்பீர மீசை
பாரதியின் கோபம் கம்பீரம் கவிதை மீசை என எல்லாம் கொண்டவர் ஆண்டவர் ஒருவரே!!!! என்கிறார் இந்த வலைஞர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications