கூவத்தூர் நாயகன் கருணாஸின் திடீர் குமுறல் ஏன்?
Recommended Video

சென்னை: கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது என்று தற்போது கேட்டு கருணாஸ் குமுறியுள்ளார். இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தார். அன்று இரவோடு இரவாக முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் சட்டசபை உறுப்பினர்களின் தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஓபிஎஸ். பின்னர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், தன்னை சசிகலா குடும்பம்தான் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது என்றார்.

ரிசார்ட்
இதையடுத்து ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் தனக்கு பேரவையில் ஆதரவை நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் படி கேட்டார். இதனிடையே சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா 122 எம்எல்ஏக்களை கொண்டு சென்று கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

சகல வசதிகள்
இந்த கூவத்தூர் ரிசார்ட்டை காண்பித்ததே கருணாஸ்தான் என்று கூறப்பட்டது. கிட்டதட்ட சசிகலாவுக்கு வலது கரம்போல் இருந்தவரும் கருணாஸ்தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் அங்கு தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு "சகல வசதிகளை" செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதிமுக அரசு தப்பியது
மேலும் எம்எல்ஏக்களும் அப்படி இப்படினு கம்பி நீட்டாமல் இருப்பதை கருணாஸ் உறுதி செய்தார். இதனாலும் எடப்பாடி முதல்வராக பதவியேற்றார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அதிமுக அரசு தப்பியது.

கைகாட்டியது
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பேசிய கருணாஸ், கூவத்தூரில் இந்த கருணாஸ் செய்த உதவிகளால்தான் இந்த அரசாங்கம் உருவானது என்றும் கூவத்தூர் ரிசார்ட்டை கைகாட்டியதே நான்தான் என்றும் பேசியுள்ளார்.

விமர்சனம்
கூவத்தூர் முகாம் நாட்களின்போது முக்கிய பங்கு வகித்த கருணாஸ், அரசு, காவல் துறையை இப்படி விமர்சனம் செய்து பேசியுள்ளது ஏன் என தெரியவில்லை. எனினும் கூவத்தூரினால்தான் அரசாங்கம் தப்பியது என்பதை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications