அப்பலோவுக்கு ராஜாத்தி அம்மாள் வர சசிகலா நடராஜன் சிக்னல் கொடுத்தது இதற்குதானா?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை அப்பல்லோவில் சந்திக்க சசிகலா நடராஜன் ஒப்புக் கொண்டதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜாத்தி அம்மாள் நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்றார். அங்கு சசசிகலா நடராஜனுடன் 45 நிமிடம் ராஜாத்தி அம்மாள் பேசியிருக்கிறார்.
அப்பல்லோவுக்கு ராஜாத்தி அம்மாளை அனுப்ப கருணாநிதி முதலில் தயங்கி பின்னர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து சசிகலா நடராஜன் தரப்புக்கு ராஜாத்தி அம்மாளின் வருகை சொல்லப்பட்டிருக்கிறது.

அப்பல்லோவில் ராஜாத்தி
சசிகலா நடராஜனும் சம்மதிக்க ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ சென்று ஜெயலலிதா உடல்நலம் விசாரித்தார். ராஜாத்தி அம்மாள் வசிக்கும் ஆழ்வார்பேட்டை சிஐடி காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சசிகலா நடராஜன் செல்வது வழக்கம்.

ஆஞ்சநேயர் கோவில் நட்பு
அதேபோல் ராஜாத்தி அம்மாளும் அந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். கோவிலில் இருவரும் சந்தித்தாலும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்வது உண்டு. இந்த 'ஆஞ்சநேயர்' கோவில் சந்திப்புதான் தற்போது சசிகலா நடராஜனுக்கு கை கொடுத்திருக்கிறதாம்...

சசிகலா புஷ்பா
ஜெயலலிதாவின் உடல்நிலையை முன்வைத்து ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா மூலம் மத்திய அரசு தமக்கு நெருக்கடி கொடுக்கும் என நினைக்கிறாராம் சசிகலா நடராஜன். சசிகலா புஷ்பாவின் தமக்கு எதிரான பேட்டிகளையும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதையும் தடுத்து நிறுத்தும் வகையில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவரான ராஜாத்தி அம்மாளிடம் பேசுவதற்கு இது ஒரு சந்தர்ப்பம் எனவும் சசிகலா நடராஜன் விரும்பியதாக கூறப்படுகிறது.

கனிமொழி
ஏற்கனவே கனிமொழிக்கு சசிகலா புஷ்பா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.. ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பாவுக்கு கனிமொழிதான் ஆதரவும் கொடுத்து வருகிறார்... இதனால் ராஜாத்தி அம்மாள்- கனிமொழி மூலமாக எப்படியும் சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்திவிடலாம் என்பது சசிகலா நடராஜனின் கணக்கு. இது தொடர்பாகத்தான் ராஜாத்தி அம்மாளிடம் விரிவாக சசிகலா பேசினார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications