நமீதாவை "புக்" பண்ண முடியலையே?... ஆதங்கத்தில் அதிமுக வேட்பாளர்கள்!
சென்னை: நடிகை நமீதா அதிமுகவில் சேர்ந்தது அதிமுகவினருக்குப் பெரும் உற்சாகம் அளித்தது. ஆஹா.. குஷ்புவுக்குப் பதிலடியாக நமீதா கிடைத்து விட்டார் என்று அகமகிழ்ந்தனர். ஆனால் அவர்களுக்குப் பேரிடியாக அவரை பிரச்சாரத்திற்குப் புக் பண்ண முடியாமல் சிரமப்படுகின்றனராம் அதிமுக வேட்பாளர்களும், கட்சிப் பிரமுகர்களும்.
அதிமுக சார்பில் பேசக் கூடிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் நமீதாவின் பெயர் இல்லாததே இதற்குக் காரணம். இதனால் விந்தியாதான் லீடிங் ஸ்டார் பேச்சாளராக மேடைகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறாராம்.

கட்சியில் சேர்ந்த கையோடு பிரச்சாரத்தில் குதித்துக் கலக்கலாம் என்று நினைத்திருந்த நமீதாவோ பெரும் ஏமாற்றத்துடன் உள்ளாராம்.
தற்போது அதிமுக தரப்பில் நடிகைகள் வரிசையில் விந்தியாதான் லீடிங்கில் உள்ளார். அவரை தங்களுக்கு ஆதரவாகப் பேச வைக்க வேட்பாளர்கள் முண்டியடிக்கிறார்களாம். அமைச்சர் வளர்மதி கூட விந்தியாவை வைத்து ஒரு கூட்டம் போட்டுக் காட்டி விட்டார்.
அதேபோல குயிலி, குண்டு ஆர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் உள்ளனர். ஆனால் இவர்களை விட விந்தியாதான் செம பிசியாக இருக்கிறாராம். நமீதா வந்தால் விந்தியாவுக்கு வேலையே இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் நமீதாவை வெயிட்டிங்கில் வைத்து விட்டு விந்தியாவை தொடர்ந்து லீடிங்கிலேயே வைத்துள்ளனர்.
இத்தனைக்கும் விந்தியாவுக்கு முன்னால் அதிமுகவுக்கு வந்தவர் சிம்ரன். ஆனால் அவர் திருமணமாகி ஒதுங்கி விடவே விந்தியாவுக்கு வெளிச்சம் கிடைத்தது. கடந்த 2011 தேர்தலில் தமிழகம் முழுக்க விந்தியா கலக்கினார். இதனால் அவர் பிரபலமும் ஆனார்.
இந்த நிலையில் தற்போது நமீதா வந்ததால் அதிமுகவுக்கு பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்த்தனர் கட்சியினர். ஆனால் அதில் மண்ணைப் போட்டு விட்டார்கள் அதிமுகவின் மேலிடத்து மச்சான்ஸ்கள்!
இதற்கிடையே, நமீதாவை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வேறு... கரகாட்டக்காரன் படத்தில் வரும் காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்தான் ரொம்ப பேமஸ்...!!
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications