For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டிறைச்சி தடைக்குக் காரணம் மதவெறியா? சீமான் நறுக் கேள்வி: வீடியோ

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடைவிதித்திருப்பதற்கு காரணம் பசுக்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்கா அல்லது முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ள

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: மாட்டுக்கறியா அல்லது மதவெறியா என்கிற சந்தேகம் எழுகிறது என மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு எதிராக விதித்துள்ள தடையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது கூறினார்.

மத்திய அரசு பசுவதை தடுப்புச் சட்டத்தில் மாட்டிறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ விற்கவோ கூடாது என தடை விதித்துள்ளது. இதனை பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் எதிர்த்து வருகின்றனர்.

 Why should central government ban cow's meat? asked Seeman

தமிழகத்தில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்த பசுவதை தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சியும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தின.

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசு ஏன் மாட்டுக்கறிக்கும் ஒட்டகத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும். பன்றிக் கறிக்கும் தடை விதிக்கலாமே. ரமலான் மாதத்தில் மாட்டுக்கறிக்கு மட்டும் தடை விதித்திருப்பது மாட்டுக்கறி மீதான தடையா அல்லது மதவெறியா என்ற கேள்வியை எழுப்புகிறது என கூறினார்.

English summary
Why should central government ban cow's meat? Is this due to intolerance on muslim religion asked Seeman in a meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X