நாங்க எதுக்கு விஜயகாந்த்துக்குப் பணம் கொடுக்கனும்?.. இல.கணேசன் கேள்வி
கோவை: விஜயகாந்த்துக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கேட்டுள்ளார்.
பேரம் பேசினார்கள், பணம் கொடுக்க முன்வந்தார்கள் என்று தமிழக அரசியல் களமே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக திமுக, தேமுதிக, பாஜக, மதிமுக ஆகியவற்றுக்கு இடையே கடும் வார்த்தைப் போரும், அறிக்கைகளும், வக்கீல் நோட்டீஸ்களும் பறந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் கோவை வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், நாங்கள் ஏன் விஜயகாந்த்தக்குப் பணம் கொடுக்க வேண்டும். அதற்கான அவசியம் என்ன வந்தது.
நாங்கள் பேரம் பேசியதாக வைகோ கூறுவது தவறானது. வைகோ ஒரு கூட்டணியின் தலைவர். அவர் இப்படி பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும். இதுதான் வைகோவின் நோக்கமாக இருக்க வேண்டும் ஆனால் அவர் அதை விடுத்து தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் போய் விட்டார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு சந்தோஷமே வந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மக்கள் நலன் கூட்டணியால் மக்கள் நலனே போய் விட்டது.. அதாவது கூட்டணிக்கு விஜயகாந்த் பெயரை வைத்து விட்டனர். ஏன் அந்தப் பெயரை வைத்தனர் என்று தெரியவில்லை.
நாங்கள் சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளோம். முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார் இல.கணேசன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications