சிம்புவின் இந்த புது கெட்டப் எதற்காக?... வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிம்புவின் இந்த புது கெட்டப் எதற்காக?... வைரலாகும் வீடியோ

  சென்னை: சிம்பு புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சினிமாவுக்கான கெட்டப் அல்ல என்பதை அவர் தெளிவுப்படுத்திவிட்டார்.

  சக்க போடு போடு ராஜா பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிம்பு ரொம்பவே உற்சாகமாகியுள்ளார். அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படத்தின் போது படத்தை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கண்டபடி விமர்சித்தனர்.

  இதனால் கோபமடைந்த சிம்பு, சமூக வலைதளங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களுடன் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.

  நீண்ட நாளாச்சு

  நீண்ட நாளாச்சு

  அதில் சிம்பு கூறுகையில், சக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாள்களாயிற்று. அதனால் பேச வேண்டும் என தோன்றியது. அதனால் பேசுகிறேன்.

  ரொம்ப மிஸ் செய்கிறேன்

  ரொம்ப மிஸ் செய்கிறேன்

  எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். சமூக வலைதளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.

  வேறு விஷயம்

  வேறு விஷயம்

  நீங்கள் அனைவருமே இருக்கும்போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன் நம்புங்கள் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

  சிம்பு சூசகம்

  சிம்பு சூசகம்

  இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகியுள்ளனர். மேலும் வேறு ஒரு விஷயத்துக்கான கெட்டப் என்று அவர் கூறியுள்ளதால் விரைவில் தனக்கு டும் டும் டும் கொட்டப் போகிறது என்பதைத் தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளாரோ என்று ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

  பாஜக எதிர்ப்பு

  பணமதிப்பிழப்பால் மக்கள் பட்ட திண்டாட்டம் குறித்த பாடலை தட்றோம் தூக்றோம் படத்திற்காக சிம்பு பாடியுள்ளது வைரலாகியுள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் சிம்பு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Video that goes viral that Simbu thanks his fans and he was in new getup. He ensured that that getup is not for cinema.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற